என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
    X
    இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

    அம்மா உணவகங்களில் சொந்த செலவில் இலவச உணவு வழங்கும் அமைச்சர் ரகுபதி

    கொரோனா காலம் என்பதால் கருணாநிதியின் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும்படி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினம், நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா காலம் என்பதால் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும்படி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுகவினர் அவரவர் வீடுகளில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி கொண்டாடவேண்டும் என்றும், ஏழை-எளிய மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவி செய்கின்றனர்.

    அவ்வகையில், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம், ராணியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் சட்ட அமைச்சர் ரகுபதி தனது சொந்த செலவில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இதற்காக ரூ.1.50 லட்சம் வழங்கிய அவர், இலவச உணவு வழங்கும் திட்டத்தினை இன்று
    தொடங்கி வைத்தார்.

    இலவச உணவு வழங்கும் அமைச்சர் ரகுபதி

    இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ., வை.முத்துராஜா, திமுக மூத்த வழக்கறிஞர் எஸ்.திருஞானசம்பந்தம், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், நகர செயலாளர் நைனா முகம்மது , வட்ட செயலாளர் சத்தியா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
    Next Story
    ×