என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியை யுனைஸ்ரீ கிறிஸ்டி ஜோதி என்பவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வை வேடம் அணிந்து வந்தார்.
    புதுக்கோட்டை:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்-லைன், வாட்ஸ்-அப், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக ஆசிரியை யுனைஸ்ரீ கிறிஸ்டி ஜோதி என்பவர் பள்ளியில் மாணவர் சேர்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வை வேடம் அணிந்து வண்டிபேட்டை பகுதியில் பாட்டுப்பாடி, நெல்லிக்கனிகளை அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு வழங்கி பள்ளியில் சேர வலியுறுத்தினார். மேலும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படுவதை படிக்க அறிவுறுத்தினார். வித்தியாசமான இவரது விழிப்புணர்வு நடவடிக்கை அனைவரையும் கவர்ந்தது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியாகினர். புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்புக்கு இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து123 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 59 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கறம்பக்குடியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கிருமிநாசினி பயன்படுத்தி, முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
    மக்கள் கொடுக்கும் புகார் மனுவின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளுக்கு உடனுக்குடன் பணியாளர்களை அனுப்பி பணிகளை மேற்கொள்ள செய்கிறார் எம்எல்ஏ முத்துராஜா.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, தனது தொகுதியில் மக்கள் நலப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறார். மக்கள் கொடுக்கும் புகார் மனுவின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளுக்கு உடனுக்குடன் பணியாளர்களை அனுப்பி பணிகளை மேற்கொள்ள செய்கிறார். 

    அவ்வகையில், புதுக்கோட்டை நகர்ப்புற பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து விரைந்து நிவர்த்தி செய்வதற்காக, எம்எல்ஏ முத்துராஜா, தனது சொந்த முயற்சியில் முத்துக்குமார் (9597693317), பால்ராஜ் (8760313860) ஆகிய பணியாளர்களை நியமித்துள்ளார். அவர்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்புகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கூறி உள்ளார். 

    குடிநீர் குழாய் அடைப்பு சரிபார்க்கும் பணியை ஆய்வு செய்யும் எம்எல்ஏ

    பூங்கா நகர் 1ம் வீதி பகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் அதை சரிசெய்யும் பணி நடைபெற்றது. சார்லஸ் நகர் 2ம் வீதியில் குடிநீர் குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலைய சிறு நீர் கழிப்பிடம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சரி செய்யப்பட்டன.

    பள்ளி மைதானத்தில் துப்புரவு பணி

    காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ வை.முத்துராஜா, அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் செடிகொடிகள் முளைத்தும் குப்பைகள் தேங்கி கிடந்ததையும் கவனித்தார். உடனடியாக மைதானத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நகராட்சி பணியாளர்கள் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 
    பொன்னமராவதி ஒன்றியம் கோவனூர் மற்றும் திருக்களம்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி ஒன்றியம் கோவனூர் மற்றும் திருக்களம்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி உத்தரவின்பேரில் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. கோவனூரில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என 84 பேர் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர். இதேபோல் திருக்களம்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    கந்தர்வகோட்டை அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன்அருகே அரசு துணை சுகாதார நிலையம், பள்ளி கூடம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளன. அதேநேரத்தில் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளன.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால், தஞ்சாவூரிலிருந்து குடிமகன்கள் அதிக அளவில் இந்த கடைக்கு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அதிகமாக கூட்டம் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதுமட்டுமின்றி நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூடி சாவியை முதல்-அமைச்சருக்கு கூரியர் மூலமாக அனுப்புவது என்று முடிவு எடுத்து கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில், இன்னும் சில தினங்களில் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக மனு ஒன்றை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    விராலிமலை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை அருகே பூதகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி புஷ்பராணி (வயது 28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வருகிறார். கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் புஷ்பராணி தூங்க சென்றார். நேற்று காலையில் அவர் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் திருமணமாகி 6வருடங்கள் ஆனநிலையில் இச்சம்பவம் குறித்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர். புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் இறப்பு அவ்வப்போது காணப்படுகிறது. இந்த நிலையில் அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து900 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 58 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து3 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்து 62 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து945 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது 564 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது.
    கார் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டையில், ஆலங்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார், ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
    மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி:

    மணமேல்குடி-கள்ளக்குறிச்சி வெள்ளாற்று பகுதியில் மாட்டு வண்டிகளில் சிலர் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த தளிக்கோட்டை பகுதியை சேர்ந்த குணசேகரன், முருகானந்தம், மணிகண்டன், பழனியப்பன் ஆகிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 4 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 74 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 883 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதனால் இறப்பு எண்ணிக்கை 316 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ×