என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வம்பன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வம்பன் காலனியை சேர்ந்த சுதாகர் (வயது 40) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு, இரண்டு மொபைல் மற்றும் ரூ.1860 இவைகளை பறிமுதல் செய்து அவரை ஆலங்குடி காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
    • மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகர் காலனியை சேர்ந்தவர் முத்து ராஜ். இவருக்கு சொந்தமான 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் அவருடைய மாடு தவறி விழுந்து விட்டது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப் படைத்தனர். மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு நிலைய மீட்பு குழு வினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பொன்-புதுப்பட்டி அரசு பள்ளியில் கலை போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில்

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பாக தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா, வட்டார கல்வி மேற்பார்வையாளர் நல்லநாகு, பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவிகள் பங்கேற்று மாணவிகள் ஓவியம் வரைதல், களிமண் சிற்பம் செய்தல், வண்ணம் தீட்டுதல், காய்கறி,பழங்கள் மூலம் கலைப்பொருட்களான பொம்மைகள் வடிவமைத்து போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவிகளின் கலை படைப்புகளை ஆசிரியர்கள் பார்வையிட்டு தேர்வு செய்தனர்.

    • ஆடு திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது ெசய்யப்பட்டனர்
    • ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி, கறம்பக்குடி, செம்பட்டி விடுதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆடுகளை பறிகொடுத்தவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான தனிப்படை போலீசார், இச்சடி முள்ளிக்காப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளிக்காபட்டி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர். மேலும் போலீசார் விசாரணையில் ஆடுகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து முள்ளிக்காப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் (வயது 38), கல்லாக்கோட்டை முருகேசன் (43), வேலாடிப்பட்டி குமார் ( 35), சுந்தம்பட் டி ராமராசு ( 32), கன்டினிவயல் ஜோதி ( 21)ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    மேலும் போலீசார் வாகனத்தில் இருந்த ஆடுகள் 46 மற்றும் ஆடு திருட்டில் பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களை பறிமுதல் செய்து செம்பட்டி விடுதி காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

    சம்பவம் குறித்து ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் காவல் ஆ ய்வாளர் அழகம்மை ஆகியோர் வழக்கு பதிவு செய்த செம்பட்டிவிடுதி போலீசார் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக் கோட்டை சிறையில் அடைத்தனர்

    • புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பழுதான பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாண்டான்விடுதி ஊராட்சி பேயாடிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை காரணமாக அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை மற்றும் பக் கவாட்டு சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுகின்றன.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் குழந்தைகளை அங்கன்வாடி மை யத்திற்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். மேலும் தற்காலிகமாக மாற்று இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

    அங்கன்வாடியில் 30 குழந்தைகள் பயின்று வரும் நிலையில் மாற்று கட்டிடத்தில் போதிய இட வசதி கழிப்பறை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடி நட வடிக்கை மேற்கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைந்து தரு மாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூமிநாதர் கோயிலில் வாஸ்து பூஜை நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் ஆரணவள்ளி சமேத பூமிநாதர் கோயிலில் வாஸ்து நாளையொட்டி ராஜப்பா குருக்கள் தலைமையில் சிறப்பு யாகபூஜைகள் மற்றும் பூமிநாதர் ஆரணவள்ளி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செவலூர் பூமிநாகர் ஆரணவள்ளி வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக வாஸ்துநாள்களில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
    • சமாதான கூட்டத்தில் எழுத்து பூர்வமாக அறிவிப்பு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி அச்சங்கத்தினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். அதற்கு அதிகாரிகள் சமாதானம் பேசுவதும், போராட்டம் தற்காலிகமாக கைவிடுவதும் வாடிக்கையாக இருந்தது.

    அதே போன்று நேற்று சிஐடியு சார்பில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவித்து, வாயில் முன்பாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாட்டு வண்டிக்கு குவாரி செயல்படும் என முடிவு செய்யப்பட்டு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சமாதானமாக கலைந்து சென்றனர்.

    கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட துறை அதிகாரிகள், மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் 16 கடைகள் ஏலம் விடப்பட்டது.
    • கட்டப்பட்டு 4 வருடம் கழித்து நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நி லையம் கட்டப்பட்டு நான்கு வருடங்கள் ஆன நிலையில் திறக்கப்படா மல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் விரைவில் பேருந்து நிலையத்தை திறக்க கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று பேருந்து நிலையத்தி ல் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன. ஏல தாரர்கள் டோக்கன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கபட்டனர்.

    அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.3000 வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகையான ரூ.10,100 வரை ஏலம் விடப்பட்டன. ஏலமானது துவக்கத்தில் சலசலப்புடன் ஆரம்பித்து இறுதியில் சுமூகமாக நிறைவுற்றது.

    இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், மற்றும் பல அரசு அதிகாரிகள் பங் கேற்றனர்.

    மேலும் பேருந்து நிலையம் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அப்பகுதி பொதுமக்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • வீட்டில் இருந்த பெண் மாயமானார்
    • எம்.காம் படித்து வருகிறார்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் கனிமொழி (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்த கனிமொழி மாயமானார். உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தை செல்வைாஜ் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை யாரும் கடத்தி சென்றனரா...? அல் லது காதலனுடன் சென்றுவிட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.

    • பெண்ணிடம் 6.5 புவுன் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வீட்டில் பெற்றோருடன் தூங்கிய போது சம்பவம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள காளையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சுமித்ரா (வயது 23).

    குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக கணவனை பிரிந்து காளையன்தோப்பில் உள்ள தனது தந்தை ராமலிங்கம் வீட்டில் சுமித்ரா வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமித்ரா, தந்தை ராமலிங்கம் தாய் ஜெயலட்சுமி, சகோதரி சுமதி ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அதிகாலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உறங்கி கொண்டிருந்த சுமித்ரா கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் சங்கிலியை அறுத்து சென்று விட்டனர்.

    இச் சம்பவம் குறித்து ராமலிங்கம் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    ஆதனக்கோட்டை, புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம் பட்டி, வெள்ளாள விடுதி சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை (25-ந் ேததி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • வாகனம் மோதி முதியவர் பலியானார்
    • சாலையோரமாக நடந்து சென்றார்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள வடவளாம் ஊராட்சி சேர்ந்தவர் சந்தானம் (வயது 60) இவர் மாங்கனம்பட்டி சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த போஸ் நகரை சேர்ந்த கல்வெத்மொய்தீன் (39) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர் பாரவிதமாக இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானம் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செம்பட்டிவிடுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×