என் மலர்
புதுக்கோட்டை
- விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- புதுக்கோட்டை மாவட்ட மாநாடு நடைபெற்றது
புதுக்கோட்டை:
தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9-ஆவது மாநாடு கீரனூரில் நடைபெற்றது. தோழர் மருதப்பா நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். மணிவேல் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் தங்கவேல் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், பொருளாளர் சண்முகம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநில செயலாளர் எம்.சின்னதுரை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர்.
தமிழக அரசு வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஏழை மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். மகாத்மாக காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். அவர்களுக்கு வருடத்திற்கு நூறுநாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை குறைக்காமலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- பல ஆண்டுகளாக நடந்து வருகிறது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்திற்காக ஆழ்குழாய் கிணறுகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த கி ணறுகளில் நீர்மூழ்கி மோட்டார்கள் இயக்க பயன்படும் மின் வயர்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் அறுத்து துண்டித்துச்செல்கின்றனர். இதேபோல கடந்த இரு தினங்களுக்கு முன் கீரமங்கலம் அருகில் சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த ரெங்கன், இன்பசேகரன், கொத்தமங்கலம் கிழக்கு பகுதியை சேர்ந்த ராஜாக்கண்ணு, ஆறுமுகம் ஆகிய விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மின் வயர்களை துண்டித்து மர்மநபர்கள் திருடிச்சென்றனர். நேற்று காலை தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது வயர்கள் திருடப்பட்டுள் ளதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சேரும் வகையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது
- முதல்-அமைச்சர் செயல்படுத்தும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் அலுவலர் களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி பரப்பு 1,85,963 ஏக்கர் மற்றும் இதர பயிர்களின் சாகுபடி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரம் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 3779 மெட்ரிக் டன், டிஏபி 988 மெட்ரிக் டன், பொட்டாஸ் 916 மெட்ரிக் டன், காம்ளக்ஸ் 4805 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரங்கள் மற்றும் விதைகள் கிடைக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என வேளாண்மை இயக்குநர் அறிவுறுத்தினார்.
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் 120 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் விரிவாக வேளாண்மை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு பருவத்தில் நெல் சம்பா சாகுபடி செய்துள்ள 1,85,963 ஏக்கரில், 1,74,624 ஏக்கரில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றுசேரும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வேளாண்மை இயக்குநர்அண்ணாதுரை, அறிவுறுத்தினார்.
- ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது.
- கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் ஒழுங்குமுறைபடுத்துதல் அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது. நேற்று மாலைக்குள் கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்.
சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். கவர்னர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும் அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். கவர்னர் கையெழுத்து போட்டு விட்டால் இதற்கு உயிர் வந்துவிடும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.
தற்போது வரை கவர்னரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம்.
கவர்னர் மீது வழக்கு போட முடியாது. கவர்னர் இந்த சட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அனைவருக்கும் தெரியும். ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும். தெளிவான பதில்களை நாங்கள் ஏற்கனவே கவர்னருக்கு கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 13 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கியது.
- அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில்
புதுக்கோட்டை
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு தொடர்பாக பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் தலா ஒரு மையம் என்ற அடிப்படையில் 13 இடங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி மையம் நேற்று முதல் தொடங்கியது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பயிற்சியானது தொடர்ந்து அளிக்கப்படும் 'நீட்' தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் செய்யும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது."
- புதிய துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது
- மருதங்கோண் விடுதியில் கட்டி முடிக்கப்பட்ட
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். அந்த வகையில் மறமடக்கியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருதங்கோண்விடுதயில் கட்டி முடிக்கப்பட்டு இருந்த துணை சுகாதார நிலையத்தை அங்கிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சுகாதார நிலையத்தின் சாவினை மருத்துவரிடம் வழங்கினார்.
மருதங்கோண் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலாராஜேந்திரதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் பாப்பாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் கார்த்திகா, ஹெல்த் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிங்காரவேலு, ஊராட்சி மன்ற தலைவர் நிலோபர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் விஜயா பூபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, ரஞ்சனி , அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சாகுல் ஹமீது, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அரங்கதங்கமணி நன்றி கூறினார்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை பன்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது
- ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் திருவரங்குளம் ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை திறன்களை வெளிக்கொணரும் ஒருங்கிணைந்த கலை மற்றும் பன்பாடு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள். குளோரியாமேரி, வசந்த அருவி இய ன் முறை மருத்துவர் செந்தில்செல்வன், திருவரங்குளம் ஒன்றிய காளிமுத்து கோகிலேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
புதுக்கோட்டை:
ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தீபக்ரஜினி தலைமையில் மற்றும் கறம்பக்குடி நகர வர்த்தக சங்கம் முன்னிலையில் ஆன்லைன் முகவர்களை அழைத்து குற்ற தடுப்பு மற்றும் பாதுகாப்பு பற்றியும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது பற்றியும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. மேலும் நகர வர்த்தக சங்கத்தின் சார்பாக கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள் நியமிக்க கோரியும், போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் குற்ற பிரிவு காவலர்களை நியமிக்க கோரியும் கறம்பக்குடி நகர் பகுதியில் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் மூலம் கூடுதல் கேமராக்கள் வைக்கவும், கறம்பக்குடி பேரூராட்சியில் கால்நடைகளை அப்புற படுத்தவும் கோரிக்கைகள் வைத்தனர்.
- 12 கிராம மக்கள் திருப்புனவாசலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பறையத்தூர், சோத்திரிவயல், மங்களம், எட்டிச்சேரி, புத்தாம்பூர் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாம்பாற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது.இப்பகுதிகளில் ஓடும் பாம்பாறானது ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டு லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு அறிவித்துள்ள வரம்பு எல்லையை மீறி மணல் அள்ளப்படுவதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனுமதித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விவசாய நிலங்கள் வறட்சியடைந்து காணப்படுவதாகக் கூறி திருப்புனவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்மந்தப்பட்ட ஆற்றுப்பகுதியில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில் தங்கள் பகுதி ஏற்கனவே வறட்சியான பகுதி, குடிதண்ணீர் இன்றி தவித்து வருகிறோம், இந்நிலையில் தற்போது மணல் குவாரி அமைத்து நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தங்கள் பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மணல் குவாரியை இங்கிருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பொதுமக்களை பெரிய அளவில் திரட்டி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
- மாமனாரை சுட்டு கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்
- குடும்ப தகராறில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டையை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் கூடா நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் தகராறு ஏற்பட்டதால், லதா கோபித்துக் கொண்டு, அதே ஊரில் உள்ள தனது தந்தை சைவராசு(72) வீட்டுக்கு சென்றுவிட்டார். இவர்களது விவகாரத்து வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அதில் மகள்கள் இருவரும் தாயின் பராமரிப்பில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் லதா, தனது தந்தை சைவராசுவுடன் நீதிமன்றத்தில் இருந்து ஊருக்கு சென்றார். வடுகப்பட்டியில் பேரூந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற கொண்டிருந்த சைவராசுவை, ரவிச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டதில், அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதை த டுக்க முயன்ற அதே ஊரை சேர்ந்த முருகேசனையும் ரவிச்சந்திரன் துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முருகேசன் மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.12. 80 லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- விராலிமலை பேருந்து நிலையத்தில்
புதுக்கோட்டை
விராலிமலை பேருந்து நிலையத்தில் 12 லட்சத்தி 80 ஆயிரத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கடைகள் அமைக்க விராலிமலை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், மாவட்ட நிற்வாகத்திற்கு நிர்வாக ஒப்புதல் கோரியிருந்தனர். இது தொடர்பக பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் 15 -வது நிதிகுழு மான்யத்தில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரூ.12 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பீட்டில் 5 வணிக கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்று கட்டுமான பணிகள் தொடங்கியது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, கவுன்சிலர் மணிகண்டன், உதவி பொறியாளர் அறிவழகன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சோமேஸ் கந்தர் செய்திருந்தார்
- உருட்டுக்கட்டையால் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
- குழந்தை தகராறில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தோப்புக்கொள்ளைச்சேர்ந் த சிதம்பரம் மகன் தங்கராசு ( வயது 42) இவரது மனைவி இறந்து விட்டார் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் இவர்களது உறவினரான மாங்கோட்டை காத்தான்விடுதியைச்சேர்ந்த மணிக ண்டன் மனைவி இலக்கியா கடந்த 5 ஆண்டுகளாக தங்கராசுவின் குழந்தைகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கராசு தனது குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு இலக்கியாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அவரது குழந்தைகள தங்கராசுவிடம் செல்ல மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று இலக்கியா வீட்டிற்கு சென்ற தங்கராசு உருட்டுக்கட்டையால் இலக்கியாவை சரமாரியாக தாக்கி, பாட்டிலால் வலது கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த க ாயம் அடைந்த கீழே மயங்கி விழுந்துள்ளார். இதனை பா ர்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.






