என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருட்டு
- ஆழ்குழாய் கிணறுகளில் மின் வயர்கள் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- பல ஆண்டுகளாக நடந்து வருகிறது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயத்திற்காக ஆழ்குழாய் கிணறுகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த கி ணறுகளில் நீர்மூழ்கி மோட்டார்கள் இயக்க பயன்படும் மின் வயர்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் அறுத்து துண்டித்துச்செல்கின்றனர். இதேபோல கடந்த இரு தினங்களுக்கு முன் கீரமங்கலம் அருகில் சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த ரெங்கன், இன்பசேகரன், கொத்தமங்கலம் கிழக்கு பகுதியை சேர்ந்த ராஜாக்கண்ணு, ஆறுமுகம் ஆகிய விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மின் வயர்களை துண்டித்து மர்மநபர்கள் திருடிச்சென்றனர். நேற்று காலை தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது வயர்கள் திருடப்பட்டுள் ளதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






