என் மலர்
புதுக்கோட்டை
- மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்
- இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
இலுப்பூர் அருகே உள்ள குறிச்சிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 60). இவர் இலுப்பூர் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பொன்னையா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடுத்த பணத்தை திருப்பி தராததால் படகில் அழைத்து சென்று நடுக்கடலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யபட்டார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள காரக்கோட்டை கோழிசனம் பகுதியை சேர்ந்தவர் சுலோ–சனா (வயது 60). கணவரை இழந்து விதவையான இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகி–றார்.இதற்கிடையே கடந்த 2-ந்தேதி வெளியில் சென்ற சுலோசனா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்தவித தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசா–ரித்தனர். அப்போது சுலோ–சனா கொலை செய்யப்பட் டது தெரிய வந்தது. அதா–வது, அதே ஊரை சேர்ந்த கொழுந்தன் முறை கொண்ட உறவினரான ரமேஷ் என் பவர் தனியாக வசித்து வந்த சுலோசனாவிற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.அப்போது ரமேஷ் அவ–ருக்கு பண உதவிகளும் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு சுலோசனாவால் உடனடியாக திருப்பி தர–முடியவில்லை.
இந்தநிலையில் சுலோச–னாவை ஒரு இடத்திற்கு வரும்படி ரமேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சோமநாதபட்டினம் கடற் கரை பகுதிக்கு சென்று அங்கே இருந்த நண்பர் செந்தில்குமாரை கூட்டிக் கொண்டு அங்கிருந்து படகு மூலம் கடலுக்குச் சென் றுள்ளனர்.நடுக்கடல் பகுதிக்கு சென்றதும் ரமேஷ் தான் வைத்திருந்த கட்டையால் சுலோச்சனாவின் பின் தலையில் அடித்துள்ளார். இதில் சுலோச்சனா மயங்கி விழுந்ததும் கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து சுலோசனாவின் உடலை மணமேல்குடி அலையாத்திக்காடு புதர் பகுதியில் வீசிவிட்டு சென் றுள்ளது தெரிய வந்துள்ளது.அதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பரான செந்தில்குமாரை கைது செய்த போலீசார் தலை–மறைவாக உள்ள ரமேசை தீவிரமாக தேடி வரு–கின்றனர். கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்ப–வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் மதியரசி தலைமையில் நிர்வாகிகள் மணிமேகலை, லதா, சுபா, ராஜாமணி, ராதா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். வளையப்பட்டி அரசு மருத்துவமனை முன்பாக அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் சிரமங்களை போக்க வேண்டும்.
மேற்கண்ட மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள், வாட்ச்மேன் நியமித்து பொதுமக்களுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பொன்னமராவதி அமரகண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடங்களை புதிதாக கட்டித்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஆலங்குடியில் கோரிக்கையை நிறைவேற்றி தந்த அமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
- கொத்தக்கோட்டை ஊராட்சி பகுதியில் ரூ. 25.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ அமைய உள்ளது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சி பகுதியில் ரூ. 25.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ அமைய உள்ளது. பல ஆண்டு கோரிக்கையில் ஆலங்குடி தொகுதி கீழாத்தூர் பகுதியில் புதிய கலை அறிவியல் கல்லூரியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பெற்று தந்ததுபோல அதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையின் போது தமிழக அரசு 2000 பேர் வேலைவாய்ப்பு பெரும் வகையில் சிட்கோ தொழிற் பேட்டை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.
இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதலமைச்சருக்கும், இளைஞர் நலன் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் கொத்தகோட்டை ஊராட்சி மற்றும் அப்பகுதி சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பேரூராட்சி கவுன்சிலர்கள், நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் ஒன்றிய தி.மு.க.வினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
- வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள்
- பங்குனி உத்திர திருவிழாவை முனனிட்டு நடைபெற்றது
புதுக்கோட்டை,
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில் ஜல்லிகட்டு நடைபெற்றது. நான்கு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொள்ள வைக்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் தங்களது துணிச்சலை காட்டினர். ஜல்லிகட்டு முன்னிட்டு அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- தெருவிளக்கு வசதி செய்திடவும் வேண்டுகோள்
- நரிமேடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் நகர் வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் 42 பிளாக்குகளில் 1920 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. மின் கம்பங்கள் ஊன்றப்பட்டு மின் கம்பி இணைக்கப்பட்ட நிலையில், தெரு விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நகர் பகுதியில் மின்சார டிரான்பார்மார் பழுது அடைத்திருப்பதாக கூறி இரவோடு இரவாக பிளாக் 35 முன்பாக இருந்த டிரான்ஸ்பார்மரை மின்ஊழியர்கள் கழற்றி சென்றுள்ளனர். டிரான்பார்மரை கழற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது அப்பகுதியில் உள்ள நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தப் போதும் அதை கண்டுகொள்ளாமல் டிரான்பார்மரை கழற்றி சென்றதாக கூறப்படுகிறது. தற்போது டிரான்ஸ்பார்மர் இல்லாமல் நேரிடையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மின்சார வாரிய அதிகாரிகள் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டிரான்ஸ்பார்கள் அமைத்து தெரு விளக்குகள் பொருத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 8ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது
- அந்தந்த வட்டங்களில் நடைபெறும் என்று கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் கூட்டம் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை(8ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு முகாமில் கலந்து கொண்டு தீர்வு காணலாம். நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார்சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர்பாதுகாப்பு சட்டம் 2019 ன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
- தலைக்கு மூன்று கிலோ வரை அள்ளி சென்றனர்
- வேடிக்கை பார்க்க வந்த வெளியூர்வாசிகளும் மீன் பிடித்து சென்றனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசா யம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.அதிகாலையிலேயே பொது மக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். ஜாதி மதம் பாராமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. தூரி என்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். முன்ன தாக ஊர் பெரிய வர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வந்த வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்து ஆர்வத்தோடு மீன்பிடித்தனர்.ஒரு சிலர் கைகளுக்கு இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை எடை கொண்ட கட்லா வகை மீன்கள் கிடைத்தன.
- கோடிக்கரை கடற்கரையில் ஒதுங்கிய பைபர் படகு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கினர்
- இரண்டு பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதால் துருவிதுருவி விசாரணை
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மணமே ல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் கடந்த 4ம் தேதி மர்மமான முறையில் இலங்கையை சேர்ந்த ஃபைபர் படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள்,கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று படகை ஆய்வு செய்தனர்.ஆய்வில் இலங்கையை சேர்ந்த 40 குதிரைதிறன் கொண்ட அதிவிரைவு பைபர் படகு என்பதும், அதில் டீசல் கேன்கள், 2 சட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து படகை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், படகிலிருந்து எஞ்சினை தனியாக பிரித்து யாரும் இயக்காதவாறு செய்தனர்.மேலும் அந்தப் படகில் யாரேனும் இலங்கையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்களா, வேறு ஏதேனும் மர்ம பொருட்கள் கடத்தி வரப்பட்டதா, அல்லது பழுதாகி காற்றில் இழுத்து வரப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 2 பேர் ஒழிந்திருப்பதாக க்யூ ப்ரான்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் மறைந்திருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் அதே முகாமை சேர்ந்த சிந்துஜன் (28) என்பவர் இலங்கைக்கு சென்று லிங்கேஸ்வரன்(25), தூசன் (21)ஆகிய இருவரை கள்ளத்தனமாக படகில் கூட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது. 3 பேரையும் கைது செய்த போலீசார், படகு உள்ள மணமேல்குடி கோடியக்கரை பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று, பின்பு கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகி ன்றனர். இலங்கையிலிருந்து 2 பேர் கள்ளத்தனமாக தமிழகத்திற்குள்ஊடுரு வியுள்ள சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது.
- 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.
மணமேல்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அந்த படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த படகில் வந்த மர்ம ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பதிவு இல்லாமல் வசித்து வரும் சிந்துஜன் (வயது 28) என்பவர் இலங்கைக்கு சென்று அங்கிருந்து இலங்கை அலைதீவை சேர்ந்த விந்துசன் என்கின்ற துசன் (21), லிங்கேஸ்வரன் (25) ஆகியோரை பைபர் படகு மூலம் மணமேல்குடி கோடியக்கரைக்கு அழைத்து வந்து அங்கிருந்து பஸ் மூலம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோலப்போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு
- முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
புதுக்கோட்டை
வடக்கு மாவட்ட திமுக மகளிரனி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோலப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கேகே செல்ல பாண்டியன் பரிசு வழங்கினார். அருகில் மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி,வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார், ஒன்றிய இளைஞரனி சிவக்குமார், விராலிமலை தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுகி என்கிற சுகுமாரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி பிரபு, அரசு ஒப்பந்தக்காரர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடலோர பாதுகாப்பு குழு, வனத்துறை, காவல்துறையினர் படகில் இருந்து என்ஜினை துண்டித்தனர்
- இலங்கையில் இருந்து வந்தவர்கள் யார் என்று தீவிர விசாரணை,
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மணமேல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் மர்மமான முறையில் இலங்கையை சேர்ந்த ஃபைபர் படகு ஒன்று நங்கூரமிடப்பட்டுள்ளதை மீனவர்கள் கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், காவல்துறை யினர் ஆகியோர் இலங்கை படகு நின்ற பகுதிக்கு சென்று படகை ஆய்வு செய்தனர். ஆய்வில் இலங்கையை சேர்ந்த 40 குதிரைதிறன் கொண்ட அதிவிரைவு பைபர் படகு என்பதும், அதில் டீசல் கேன்கள், 2 சட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து படகை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், படகிலிருந்து எஞ்சினை தனியாக பிரித்து யாரும் இயக்காதவாறு செய்தனர். மேலும் அந்தப் படகில் யாரேனும் இலங்கையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்களா, வேறு ஏதேனும் மர்ம பொருட்கள் கடத்தி வரப்பட்டதா, அல்லது பழுதாகி காற்றில் இழுத்து வரப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் விசார ணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ராமேஸ்வரத்தில் சேட்டிலைட்செல்ஃபோன் கண்டெடுக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், மணமேல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் இலங்கையை சேர்ந்த 40 குதிரை திறன் கொண்ட அதிவிரைவு ஃபைர் படகு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், அச்ச த்தையும் ஏற்படுத்தியுள்ளது.






