என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகற்றப்பட்ட டிரான்ஸ்பார்மரை மீண்டும் பொருத்திட பொதுமக்கள் கோரிக்கை
    X

    அகற்றப்பட்ட டிரான்ஸ்பார்மரை மீண்டும் பொருத்திட பொதுமக்கள் கோரிக்கை

    • தெருவிளக்கு வசதி செய்திடவும் வேண்டுகோள்
    • நரிமேடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் நகர் வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் 42 பிளாக்குகளில் 1920 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. மின் கம்பங்கள் ஊன்றப்பட்டு மின் கம்பி இணைக்கப்பட்ட நிலையில், தெரு விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நகர் பகுதியில் மின்சார டிரான்பார்மார் பழுது அடைத்திருப்பதாக கூறி இரவோடு இரவாக பிளாக் 35 முன்பாக இருந்த டிரான்ஸ்பார்மரை மின்ஊழியர்கள் கழற்றி சென்றுள்ளனர். டிரான்பார்மரை கழற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது அப்பகுதியில் உள்ள நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தப் போதும் அதை கண்டுகொள்ளாமல் டிரான்பார்மரை கழற்றி சென்றதாக கூறப்படுகிறது. தற்போது டிரான்ஸ்பார்மர் இல்லாமல் நேரிடையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மின்சார வாரிய அதிகாரிகள் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டிரான்ஸ்பார்கள் அமைத்து தெரு விளக்குகள் பொருத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×