என் மலர்
பெரம்பலூர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் சாத்தா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஜெயந்தி. இருவருக்கும் சந்ரூ என்கிற கோபால்சாமி(வயது 19) என்ற மகன் உள்ளார். இவர் ஈஈஈ இன்ஜினீயரிங் படித்து உள்ளார். அவ்வப்போது டிராக்டரை கொண்டு உழவு செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தந்தை ஏழுமலை, கோபால்சாமியை வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அவர் தனது கிராமத்தில்தான் விவசாய தொழில் பார்ப்பேன் என்று கூறி வெளிநாடு செல்வதற்கு மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு தந்தை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகன் கோபால்சாமி, வயல் வெளி பகுதிக்கு சென்று அங்குள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை காணவில்லை என்று தாய் ஜெயந்தி தேடி அலைந்த போது தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டுள்ளனர். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகரம்சிகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் , திருமாந்துறை கிராமம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பத்மபிரியா (35). இவர்களது மகள் அஸ்வந்திகாஸ்ரீ(10).
பத்மபிரியா திருமாந்து றையில் உள்ள வங்கியில் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். இதற்கான வட்டியை கட்டுவதற்காக தனது வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரம் பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, தனது மகளுடன் வங்கிக்கு சென்றுள்ளார்.
வங்கியில் வட்டி கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, பணம் கட்டுவதற்காக காத்திருந்து உள்ளார். அப்போதுஅவரின் மகள் அஸ்வந்திகாஸ்ரீ ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்க கேட்டு ள்ளார். இதற்காக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெ ட்டுக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், பத்மபிரியா கையில் வைத்திருந்த பண ப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா சத்தமிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாக சென்று மறைந்து விட்டனர். இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் பத்ம பிரியா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மங்கள மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்ப குதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை பறித்து சென்ற 2 இளைஞர்க ளின் உருவம் அதில் தெளி வாக பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த இரு வாலிபர்களை தேடி வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே இரூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் கேன்களுடன் லோடு வேன் ஒன்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று உள்ளது. பெரம்பலூர் ஆலத்தூர் கேட், செட்டி குளம் பாலதண்டாயுதபாணி கோவில் ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பஸ் ஒன்று வேனின் மீது மோதி உள்ளது. இதில் வேன் நிலைக்குலைந்துள்ளது. இதன் காரணமாக கேன்கள் அனைத்தும் சரிந்து கவிழந்துள்ளது. இதனால் கேன்களில் வைக்கப்பட்டிருந்த பால் ரோட்டில் ஆறாக ஓடியது.
இதில் வேனில் பயணம் செய்த 3 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வேன் விபத்துக்கு ள்ளானதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் வருகிற 25-ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.
தலைவாசல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன் பெற போகின்றனர். நமது மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற உயரிய நோக்கோடு டத்தோ பிரகதீஸ்குமார் இதனை முன்னெடுத்து வருகிறார்.
இதனால் ஒவ்வொரு கிராம பகுதி விவசாயிகளும் இந்த குழுவில் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர்.அதன்படி மலையாளபட்டியில் பகுதியில் 5 பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து பெயர்ப்பலகை திறக்கப்பட்டது. டத்தோ பிரகதீஸ்குமார் பெயர்ப்பலகையை திறந்துவைத்து விவசாயிகள் மத்தியில் பேசினார்.அப்போது அவர்,விவசாயத்தில் முன்பு போல் லாபம் என்பது இல்லை. உங்களது பிள்ளைகளை சொந்தமாக தொழில் தொடங்க ஊக்கப்படுத்துங்கள். நான் மட்டும் உயர்ந்த இடத்திற்கு வந்தால் போதாது.
நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.எனவே நம்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.அதனால் காய்கறிசந்தை திறப்பு விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டும்.இவ்வாறு டத்தோ பிரகதீஸ்குமார் பேசினார்.முன்னதாக அங்குள்ள கோவிலில் டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் மலையாளபட்டி பகுதி விவசாயிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
- மழை காலங்களில் நீர் தேங்கியுள்ளது,
- உறுதி அளித்ததன்பேரில் மக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் உள்ள அன்பு நகரில் தெருக்கள் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் நீர் தேங்கியுள்ளது, தெரு விளக்குகள் எரிய வில்லை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவி மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமிற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பிரபாகரன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் வல்லபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சி துணை பொது செயலாளருமான ராஜா ரத்த தான முகாமினை தொட ங்கிவைத்தார். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சரவணன் தலை மையிலான செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர்.
இதில் 100 யூனிட் ரத்தம் சேகரி க்கப்பட்டு பெர ம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்க ப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜா, போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ரத்த தானம் வழங்கிய 100 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மருத்துவ அணி மாவட்ட நிர்வாகிகள் ஜெயலட்சுமி, கருணாநிதி, தனபால், பாலச்சந்தர், சுதாகர், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், வக்கீல் ராஜே ந்திரன், முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவச ங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்த வர் பிரபாகரன் (வயது 38). விவசாயியான இவர் இரு சக்கர வாகனத்தில் பெர ம்பலூர் சென்றார்.
எறையூர் பிரிவு பாதை இடதுபுறம் நுழையும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் துடிதுடித்து அதே இடத்தில் பிரபாகரன் உயிரிழந்தார்.
இதனை அறிந்த பிரபா கரன் மனைவி ரம்யா மற் றும் உறவினர்கள் அதிவேக மாகவும் அதிக பாரம் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவே ண்டும். க.எறையூரில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும். இறந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண் டும் என கோரிக்கை களை வலியுறுத்தி அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிசாமி மறிய லில் ஈடுபட்டோர்க ளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதின் பேரில் சாலை மறியலில் கைவிட்டு சென்றனர்
அகரம்சீகூர்,
கடலூர் மாவட்டம் மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகா( வயது25) என்பவரை காதலித்து திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷுக்கு அவரது பெற்றோர் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண்ணை வாலி கண்டபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்னேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாமிர கம்பிகளை சுற்றி மறைத்து கொண்டு திருடி வெளியே சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
- அவரிடம் இருந்த தாமிர கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் தனியாா் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை யில் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 95 மீட்டர் தாமிர கம்பிகளை திருடு போனதாக, தொழிற்சாலையின் பாதுகாப்பு அலுவலர் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடியவர் யார்? என்று தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த பீகார் மாநிலம், நார்காட்டிய கஞ்ச் தாலுகா, ரோரி கிராமத்தை சேர்ந்த மகேந்திர மிஷ்ராவின் மகன் மனிஷ்குமார் மிஷ்ரா (வயது 33) என்பவர் தனது கால்களில் தாமிர கம்பிகளை சுற்றி மறைத்து கொண்டு திருடி வெளியே சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதைடுத்து மனிஷ்குமார் மிஷ்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த தாமிர கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர் ராஜாமணி மற்றும் குழுவினர், பெரம்பலூர் பகுதிகளில் வாகனத்த ணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியாருக்குச் சொந்தமான கார் மற்றும் வேன்களில் பள்ளிக் குழந்தைகளை மாத வாடகைக்கு அழைத்துச் சென்று வந்த 3 வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்கப்ப டாத நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 3 வாகனங்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தகுதிச்சான்று புதுப்பிக்கப் படாத சரக்கு வாகனம், வரி செலுத்தாத சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்க ளுக்கு இணக்கக் கட்டண மாக ரூ.1.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் கூறுகையில்:- தனியாருக்குச் சொந்தமான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி இயக்குவது கண்ட றியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்க ளில் அதிக பயணிகளை ஏற்ற க்கூடாது, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. வாகனங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறை களை பின்பற்றி இயக்க வேண்டும். இது சம்பந்தமாக தினமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும் என்று அவர் எச்சரித்தார்.
- ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்
- பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழுமத்தூர் ஏரியினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கிழுமத்தூர், ஓகளுர், கை.பெரம்பலூர் ஆகிய 3 ஏரிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பீட்டில் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆய்க்குடி ஏரியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் உட்புறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத்துறை மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் தினகரன், குன்னம் தாசில்தார் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி கதண்டு கடித்து பலியானார்
- காட்டில் கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்ற போது கதண்டு கடித்துள்ளது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 73), விவசாயி. நேற்று காலை பெருமாள் தனது காட்டில் கட்டியிருந்த மாட்டை கதண்டு கடித்தது. இதனால் அவர் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட சென்றார். அப்போது பெருமாளையும் கதண்டு கடித்தது. இதுகுறித்து தகவலறிந்த பெருமாளின் மகன் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.






