என் மலர்
பெரம்பலூர்
- பட்டாசு கடைகளில் விதி மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்
- தற்காலிக பட்டாசு கடைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 5 குழுவினருக்கான பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகள், நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 5 குழுவினருக்கான பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகில் புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது.
உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் என்று அவர் பேசினார்.
- பெரம்பலூரில் காதலன் ஏமாற்றியதால் பள்ளி விடுதியில் பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
- போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின
பெரம்பலூர்,
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியா ளராகவும், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பா ளராகவும் பணிபுரிந்து வந் தார்.
பள்ளியில் நடந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரை மதியத்திற்கு பிறகு காண வில்லை.
இந்த நிலையில் பள்ளியில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், விடு தியை சுத்தம் செய்வதற் காக கதவை திறந்து பார்த்தபோது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.இது குறித்து தகவல் அறி ந்த பெரம்பலூர் போலீ சார் அங்கு சென்று சுபா ஆடல ரசியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்ப ற்றினர்.
அதில், என் சாவுக்கு யாரும் காரணமில்லை. தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல் நிலை சரியில்லாத காரணத்தி னாலும், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்று சுபா ஆடலரசி கைப்பட எழுதி, தேதியிட்டு கையொப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் ஆடலரசி தற்கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆடலரசி விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற போது தனது காதலன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தார். காதலன் தன்னை ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- ஆடலரசி விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார்.
- விடுமுறையில் ஊருக்கு சென்ற போது தனது காதலன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தார்.
பெரம்பலூர்:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியாளராகவும், அந்த பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.
பள்ளியில் நடந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரை மதியத்திற்கு பிறகு காணவில்லை.
இந்த நிலையில் பள்ளியில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்து பார்த்தபோது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று சுபா ஆடலரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், என் சாவுக்கு யாரும் காரணமில்லை. தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று சுபா ஆடலரசி கைப்பட எழுதி, தேதியிட்டு கையொப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் ஆடலரசி தற்கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆடலரசி விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற போது தனது காதலன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தார். காதலன் தன்னை ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- பெரம்பலூர் இளம்பெண் கொலையில் கணவரே கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது
- போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
குன்னம்,
பெரம்பலூர் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.கணவனே கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்துள்ளார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்(வயது34), பிரவீணா(24), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் பெரம்பலூர் அருகே விஜய கோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சா லையில் வேலை பார்த்து வரும் ராஜ்குமார், சம்ப வத்தன்று இரவு வழக்கம் போல் இரவு சிப்ட் வேலைக்கு செல்வதற்கு தயாரான நிலையில், மனைவி பிரவீணாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயல் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்க வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக தெரிகிறது.
எளம்பலூர் கிராமத்தில் இருந்து- செங்குணம் பிரிவு சாலைக்கு செல்லும் தார் சாலையில் 100 மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் சென்ற போது, திடீரென 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சோளக்கா ட்டிற்கு இழுத்துச் சென்று பிரவீனா வையும்-ராஜ்குமா ரையும்- சரமாரியாக அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்பட்டது.படுகாயம் அடைந்த பிரவீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ் குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக்கொலை யில் குற்றவாளிகளை உட னடியாக பிடிக்க வேண்டும் என டிஎஸ்பி. பழனிச்சாமி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்ப ட்டு,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடை பெற்று வந்தது. இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரத்திற்கு பிரவீணா தடையாக இருந்ததால் அவரை கணவன் ராஜ்குமா ரே கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்ப டுகிறது.மேலும் கூலிப்ப டையை பிடிக்க போலிசஅர் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்ப டுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- குன்னம் அண்ணாநகர் ரேசன் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அரிசு மூட்டைகள் எரிந்து நாசமானது
- பட்டாசு வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அண்ணா நகர் பகுதியில் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த கடையின் பின்புறம் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்க மானது. இந்த நிலையில் சிலர் பட்டாசு வெடித்து விளையாடினர்.மேலும் அதிக சத்தம் எழுப்ப வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஜன்னலில் பட்டாசை வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் தீப்பொறி கடைக்குள் விழுந்து தீப்பிடித்தது.
கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை அறிந்த கடையின் விற்ப னையாளர் தொல்காப்பியன் அங்கு விரைந்து வந்து, கடையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து கொண்டி ருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்ப டுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 23 மூட்டை ரேஷன் அரிசி எரிந்து நாசமானது. மேலும் 500க்கும் மேற்பட்ட காலி சாக்குகள் எரிந்து சாம்பல் ஆனது.இதுகுறித்து தொல்காப்பியன் குன்னம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் அருகே விபத்து இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்
- கேஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது
குன்னம்,
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டத்துர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சஞ்சீவி மகன் வினோத்(வயது19), ராஜி மகன் ராம்(20), செல்வராஜ் மகன் ஆனந்த்(22), நண்பர்களான இவர்கள் பெரம்பலூர் துறையூர் சாலையில், அடைக்கம்பட்டி கிராமத்தில் டி.களத்தூர் பிரிவு சாலை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திவிட்டு, டாஸ்மாக் கடையில் இருந்து வரும் மண் பாதை வழியாக பிரதான சாலைக்கு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அப்போது, பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற டேங்கர் கேஸ் லாரி இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இந்த திடீர் சாலை விபத்தில், வினோத்தும் ராமும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் நிலவியது.மேலும் விபத்துக்கு காரணமான கேஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த அத்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராஜா (37), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்
- மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மில்லத் நகரை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 38). இவர் சம்பவத்தன்று இரவு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன் பேரையூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த மங்கலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
- பசும்பலூர் கிராமத்தில் சோகம் வயலுக்குச் சென்ற விவசாயி மின்வேலியில் சிக்கி பலி
- வ.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் அடுத்த பசும்பலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் அதே ஊரைச் சேர்ந்த பிச்சைபிள்ளை என்பவரின் வயலில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பிச்சைப்பிள்ளை என்பவரின் மக்காச்சோள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக காலை சுமார் 8 மணி அளவில் சென்றார் என கூறப்படுகிறது. பின்னர் வயலின் உரிமையாளர் ராமச்சந்திரனை தேடிய போது காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ராமச்சந்திரன் வயலில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து வ.களத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திட்டமிட்ட செயலா ?அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பூஜை தினத்தன்று நடந்த இந்த சம்பவம் அந்த ஊர் மக்களை பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.
- பெரம்பலூரில் கார் மோதி மூதாட்டி பலியானார்
- விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூா் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67). இவர் கடந்த 16-ந்தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூர்-காரை பிரிவு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த காா் எதிர்பாராதவிதமாக மூதாட்டி தனலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குன்னம் அருகே 3 பவுன் நகைகள் திருட்டு போனது
- சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 29). சரவணன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் பச்சையம்மாள் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி உள்ளார். பின்னர் விடியற்காலை 5.30 மணிக்கு அறையின் கதவை திறக்க முயன்றபோது கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவரது சத்தம்கேட்டு மாமியார் பாக்கியம் கதவை திறந்தார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த பெட்டி திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 2½ பவுன் சங்கிலி மற்றும் ½ பவுன் மோதிரத்தை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
- துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது
பெரம்பலூர்,
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையிலும் மற்றும் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மண்டல ஊர்க்காவல் படை தளபதி அரவிந்தன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் புதுபஸ் நிலைய வளாகத்தில் குழந்தை திருமணங்களே இல்லாத இந்தியா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்தோ டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முகமது உசேன் தலைமை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், கிருஷ்ணா தியேட்டர், மகளிர் கலைக்கல்லூரி, மருத்துவமனை, பள்ளி வளாகங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
இந்தோ டிரஸ்ட் சார்பில் குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா என்ற தலைப்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகரம், கிராமங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 50 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் டிரஸ்ட் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட பிரச்சாரம் செய்தனர். முடிவில் மேலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.






