search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ROAD BLOCKEDE"

    • மழை காலங்களில் நீர் தேங்கியுள்ளது,
    • உறுதி அளித்ததன்பேரில் மக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் உள்ள அன்பு நகரில் தெருக்கள் பள்ளமாக இருப்பதால் மழை காலங்களில் நீர் தேங்கியுள்ளது, தெரு விளக்குகள் எரிய வில்லை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவி மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் சாலை மறியல் செய்ய வந்தவர்களை டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மக்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.

    • கூடுதல் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • ஒரு வாரத்திற்குள் கூடுதல் பஸ்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தை அடுத்த மாவிலங்கை கிராமத்ைத மாணவ, மாணவிகள் செட்டிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளிக்கு மாவிலங்கை கிராமத்தில் இருந்து வந்து பஸ்சில் செல்கின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி மாணவ, மாணவிகள் மாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை எதுமலையில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மறித்து சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 1½ மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நீடித்தது. இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை மேலாளர் ராஜா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மாவிலங்கை கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வாரத்திற்குள் கூடுதல் பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி- பெரம்பலூர் சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முருகேசன் மற்றும் கை.களத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது குடிநீர் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை உடனடியாக சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் கள்ளக்குறிச்சி- பெரம்பலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×