என் மலர்
பெரம்பலூர்
- பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஸ்கூட்டரில் சென்ற போது சம்பவம்
பெரம்பலூர்
பெரம்பலூர் முத்துலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 40). இவர் நேற்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள தனது நிலத்திற்கு ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணியளவில் வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
பெரம்பலூர் தனியார் கல்லூரியின் மகளிர் விடுதி அருகே சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் லலிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லலிதாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும்
பெரம்பலூர்
தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீர தீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த கீழ்க்காணும் தகுதிகளுடைய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் தகுதிகளையுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். உரிய விவரங்களுடன் வருகிற 30-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம் என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திடுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக் கொண்டுள்ளார்
- 10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது
- பெரம்பலூர் கலெக்டர் தகவல்
பெரம்பலூர்:
10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான மத்திய அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
அரசு நலத்திட்டங்கள் அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் தாங்கள் ஆதார் எண் பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால், தற்போதைய புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், தற்போதைய முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆதார் தரவுகளை புதுப்பித்திடுவதன் வாயிலாக, மத்திய சேமிப்பகத்தில் ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக பதிவில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
அப்போது அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் மற்றும் சேவைகளையும் எவ்வித சிரமமும் இன்றி உடனடியாக பெற்று பயன் பெறலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த பொதுமக்கள் தங்கள் அடையாளம் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ள ஏதுவாக ''மை ஆதார்" என்ற இணையதளத்திலும், செயலியிலும் "அப்டேட் டாக்குமெண்ட்" என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. பொது மக்கள் நேரடியாக இத்தளத்திற்குள் சென்று தங்களுடைய விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். இது தவிர பொதுமக்கள் அருகே உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது ஆதாரினை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கோரி தொலைபேசி வாயிலாக வரும் எந்தவித அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பொதுமக்கள் எவரும் பதிலளித்து தங்கள் ஆதார் விவரங்களை தர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- 55-வது தேசிய நூலக வார விழா நடந்தது
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் (பொ) சந்திரசேகரன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் அகவி முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட துணை தலைவர் தமிழ்குமரன், முன்னாள் வாசகர் வட்ட தலைவர் டாக்டர் கோசிபா, அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் தமிழ்மாறன், வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் வைரமணி உட்பட பலர் பேசினர்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவி களிடையே நடந்த கட்டுரை , ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித்தேர்வுக்கான அனைத்து புத்தங்களும் இடம்பெற்றுள்ளது. இங்கு படித்த தேர்வாளர் 30 பேர் குரூப்-2 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நூலகத்தை கல்லூரி மாணவ,மாணவிகள், போட்டிதேர்வர்கள் அனை வரும் பயன்படுத்தி டிக்கொண்டு தங்களது கல்வி அறிவினை மேம்படுத்தி க்கொள்ளலாம். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமர்ந்து படிக்க வசதியாக இருக்கை அறை கேட்டனர். செய்துகொடுத்துள்ளேன். இது போல் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என தெரிவித்தார்.
இதில் நூலக அலுவலர்கள், நூலர்கள், மைய நூலக ப்பணியாளர்கள், போட்டி த்தேர்வாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட மைய நூலகர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் நூலகர் பாண்டியன் நன்றி கூறினார்.
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சமூகத்தில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர்
- விழிப்புணர்வு பேரணியில் முழக்கம்
பெரம்பலூர்:
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கவும் விழிப்புணர்வு பேரணி"
பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடக்கிய திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வீரமணி, மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணி போஸ்ட் ஆபீஸ் தெரு, சிவன்கோவில் தெரு மற்றும் பஸ்ஸ்டாண்ட் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்று மாற்றுத்திறன் மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்குதல், மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்கள் குறித்தும், ஊனம் ஒரு தடையல்ல,ஊன்றுகோலாய் நாமிருந்தால், சிந்தனையில் மாற்றம் சமூகத்தின் ஏற்றம், இணைவோம் மகிழ்வோம் போன்ற வாசகங்களை கோஷமிட்டு மாணவர்கள் சென்றனர். இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுப்ரமணியன், குணசேகரன், கலைவாணன், ரமேஷ், ரமேசு, ஜனனி, சிறப்பு பயிற்சியாளர்கள் மரகதவல்லி, துர்கா, ராணி பரிமளா, ரூபி, தனவேல், இயன்முறை மருத்துவர் குமரேசன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் செல்வராஜ் மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் வட்டார உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.
- அறுவடைக்கு முன்பே கடலை செடிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
- தொடர் மழையின் காரணமாக
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் ஆலத்தூர் கேட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். மேலும் ஒரு சில விவசாயிகள் கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக கடலை செடிகள் அறுவடைக்கு முன்பே முளைத்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதையடுத்து, கடலையை செடியில் இருந்து பிரித்தெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
- நாட்டு துப்பாக்கி வெடித்து காயம் அடைந்தவர் பலியானார்.
- வன விலங்குகளை வேட்டையாட சென்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சின்னையன் மகன் மனோகரன் (வயது 47). அதே பகுதியைச் சேர்ந்த ராஜாகண்ணு மகன் துரைராஜ் (48). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று அதிகாலை நாட்டு துப்பாக்கி மூலம் அரசலூர் மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மனோகரனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து அனுமதி இல்லாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து துரைராஜை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பிள்ளையார்பாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது."
- குரூப்-1 தேர்வினை 2,228 பேர் எழுதினர்.
- 1,178 பேர் தேர்வு எழுதவில்லை
பெரம்பலூர்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-1-ல் (குரூப்-1) துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
அதன்படி குரூப்-1 தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 3,406 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து,12 மையங்களில் குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது.தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். சரியாக காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. 2,228 பேர் குரூப்-1 தேர்வினை எழுதினர். 1,178 பேர் தேர்வு எழுத வரவில்லை
- நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற்றது
- மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பெரம்பலூர்:
செட்டிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் "நான் முதல்வன்" நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் 11 மற்றும்12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்பு வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடாலூர், பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயற்பியல் பாட விரிவுரையாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரங்கன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியத்தையும் , அதன்மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் , கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப்பிரி வுகளைப்பற்றியும், பொறியியல் கல்லூரி சேர்க்கை மற்றும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை மற்றும் நுழைவத் தேர்வுகள் குறித்தும், நான் முதல்வன் வலைதளத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்து, விழிப்புணர்வு தந்து ஊக்கப்படுத்தினார்.
- இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது
- புதுவேட்டக்குடி ஊராட்சியில் விபத்து
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி சகுந்தலா (வயது 38). இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி அரியலூரில் இருந்து பொய்யாத நல்லூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சகுந்தலா சாலையில் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா கடந்த ஜூலை 1-ந்தேதி இறந்தார். சகுந்தலா துங்கபுரம் ஐ.ஓ.பி. வங்கியில் பாரதப் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து இருந்தார்.
இதையடுத்து துங்கபுரம் ஐ.ஓ.பி. கிளை மேலாளர் தினேஷ்குமார் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு தொகையை சகுந்தலாவின் கணவர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். அப்போது புது வேட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வி தர்மலிங்கம் உடன் இருந்தார்.
- பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஊனத்துடன் குழந்தை பிறந்ததால்
பெரம்பலூர்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, கிருஷ்ணாபுரம் நடுவீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 31). ஸ்ரீராம் வெளிநாட்டில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். ராஜேஸ்வரி கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பமாக இருந்தபோது பெரம்பலூரில் உள்ள நிரஞ்சன் நர்சிங் ஹோம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். ஸ்கேன் எடுத்தும் பார்த்துள்ளனர். ராஜேஸ்வரியிடம் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாகவும், நன்றாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் குழந்தை முழு ஊனத்துடன் (மாற்றுத்திறனாளி) பிறந்திருந்ததால் ராஜேஸ்வரி, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கருவுற்ற ஆரம்பம் முதல் ராஜேஸ்வரி அதே மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்தும் டாக்டர்களின் ஆலோசனையின்படி தகுந்த நேரத்தில் ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளார். ஆனால் டாக்டர்கள் சரியாக ஸ்கேன் எடுக்காமலும், உரிய சிகிச்சை, பரிசோதனை செய்யாமலும், கவனக்குறைவால் குழந்தை ஊனத்துடன் பிறந்ததாக கூறி ராஜேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், துயரத்துக்கும், அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கும் இழப்பீடாக ரூ.15 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையுடன் மருத்துவமனை நிர்வாகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜவகர் தீர்ப்பு வழங்கினார். அதில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் ராஜேஸ்வரிக்கு மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவாக ஸ்கேன் பரிசோதனை செய்ததாலும், மேல் சிகிச்சை முறையாக செய்யாததாலும், மருத்துவ சேவை குறைபாடு, அஜாக்கிரதையினால் பெண் குழந்தை ஊனத்துடன் பிறந்துள்ளது. அதற்கு மருத்துவமனை தான் பொறுப்பு என்று கூறி, ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ராஜேஸ்வரி-ஸ்ரீராம் தம்பதிக்கு கொடுக்க வேண்டும். மேலும் இந்த தொகையை 45 நாட்களுக்கு வழங்காவிட்டால் 8 சதவீத வட்டியுடன் சேர்த்து மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்."
- வீடு புகுந்து 2¼ பவுன் நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- பீரோவை உடைத்து எடுத்து சென்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 52). சம்பவத்தன்று நள்ளிரவு இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 2¼ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்."






