என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கழிவறையில் மயங்கி கிடந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கல்யாண் நகர், கீத்துக்கடை பகுதியை சேர்ந்தவர் சர்வானந்தம். இவரது மகள் கிரிஜா (வயது 27). இவர் பி.எஸ்.சி. பி.எட். முடித்து விட்டு தனது தாய் ஆனந்தி, அண்ணன் ஸ்ரீராம்குமாருடன் வசித்து வந்தார். கிரிஜாவுக்கு உடலில் அடிக்கடி கட்டிகள் வருவதும், மறைவதுமாகவும் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான கிரிஜா கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற கிரிஜா வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறையின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கிரிஜா மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிரிஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ. 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது
    • சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே காரை கிராமத்தில் அரசுமேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தபள்ளியில் காரை தெரணி வரகுபாடி புதுக்குறிச்சி நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 485 மாணவர்க ள்பயின்றுவருகின்றனர்.நல்ல சுற்றுச்சூழலுடன் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் பள்ளி முடிந்த பிறகும் விடுமுறைநாட்களில் சமூகவிரோதிகள் நுழைந்து மதுஅருந்துவதும் மது அருந்திய பாட்டில்க ளை அங்கேயே விட்டு செல்வதுமாக இருந்துள்ளனர். மறுநாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் போது வளாகத்திற்குள் மதுபாட்டில்கள் கிடப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

    இதனை தடுக்க வேண்டும் என நினைத்த பள்ளிதலைமை ஆசிரியர் அக்பர்கான் தலைமையிலான ஆசிரியர்கள், காரை பகுதிகளில் சமூகப்பணி செய்துவரும் கலைவேந்தன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் கலைவேந்தன் சொந்தசெலவில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 சிசிடிவி கேமராக்களை பள்ளி வாளகத்தில் அமைத்து க்கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வருவது அடியோடு தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதியும் மகிழ்சியும் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் கலைவேந்தனிடம் கேட்ட போது பிற அரசுபள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்ததை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே வரகுபாடி கிராமத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் வறியவர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து கால்நடை(மாடு)வாங்கி இலவசமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    • ஹெல்மெட் அணியவில்லை என ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து போலீசார் சார்பில் தகவல்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் சங்குத்திடல் 19-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன்(வயது 35). டிரைவரான இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். தீனதயாளன், தற்செயலாக தனது செல்போனில் பரிவாகன் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் தனது ஆட்டோவின் எண்ணை பதிவிட்டு பார்த்துள்ளார். அதில், கடந்த மாதம் 7-ந் தேதி அவருக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதில், சிக்னலில் விதிமுறை மீறல், ஹெல்மெட் அணியவில்லை மற்றும் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின்போது ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கவில்லை ஆகிய 3 காரணங்களை தெரிவித்து, ரூ.300 அபராதம் விதித்து, அதனை ஆன்லைனில் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீனதயாளன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனது மொபைல் செயலியில் இருந்து ஒரு நகல் எடுத்து அதனை தனது தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சக ஆட்டோ டிரைவர்களிடம் காண்பித்தார். அதைக்கண்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக தீனதயாளன் கூறுகையில், நான் போக்குவரத்து விதிகளை மீறவில்லை. போக்குவரத்து போலீசார் எனது வாகனத்தை சோதனை மற்றும் ஆய்வு செய்யவில்லை. இருப்பினும் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் கணக்கு காண்பிப்பதற்காக போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும் ஆட்டோ ஓட்டும் டிரைவருக்கு ெஹல்மெட் அணிவது அவசியமா?. போக்குவரத்து போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையால், என்னை போன்ற தினமும் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்துபவர்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த அபராத தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாவிட்டால், கூடுதல் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும். அல்லது அபராத தொகையை கட்டாமல் அலட்சியமாக இருந்துவிட்டால், வாகன தகுதிச்சான்று பெறும்போது சிக்கலாகிவிடும். எனவே தமிழக அரசு தலையிட்டு, ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், வாகன எண்ணை குறித்துக்கொண்டு இதுபோன்று வழக்குப்பதிவு செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும், என்றார்."

    • விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
    • பசுமை போர்வை இயக்கம் சார்பில் வழங்கப்படுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழக அரசு பண்ணை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்திட தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பசுமை போர்வை திட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது."

    • மங்களமேடு, குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க ப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூரில் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் சங்க வளர்ச்சி, பணிகள், உறுப்பினர் சேர்க்கை, வரவு,செலவு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக மீண்டும் வள்ளுன்நம்பி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய செயலாளராக சேகர், இணை செயலாளராக சுகுமார், பொருளாளராக சிவராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட பொறு ப்பாளர்களுக்கு வக்கீல்கள் பொன்னடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஆட்டோ சங்கத்தினர் தர்ணா பேராட்டம் நடந்தது
    • கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் காந்தி சிலை முன்பு சி.ஐ.டி.யூ. 3 பிளஸ்1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன டிரைவர்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், துணை தலைவர் பெரியசாமி, பொருளாளர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் கடுமையாக உயர்த்தப்பட்ட போக்குவரத்து அபராத கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் அபராதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கைவிட வேண்டும், வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு வழங்கவேண்டும், மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பபெறவேண்டும், 15 ஆண்டுகால ஆட்டோக்கள் காலாவதியானால் அரசே வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்களை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், ஆறுமுகம், பொன்ராஜ், மாவட்ட துணை தலைவர் கருணாநிதி உட்பட ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். 

    • கோவில் பூட்டை உடைத்து மாரியம்மன் கழுத்தில் நகைகள்-உண்டியல் கொள்ளையடித்துள்ளனர்.
    • நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிகரம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் இந்திரா நகரில் பிரசித்தி பெற்ற பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈச்சம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பலர் குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா (வயது 43) என்பவர் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியில் கோவிலில் மின் விளக்கை எரிய விட்டு விட்டு பின்னர் கோவிலை பூட்டிவிட்டு இளையராஜா வீட்டுக்கு சென்றார்.

    இன்று அதிகாலையில் 5.30 மணி அளவில் அந்த வழியாக கோவிந்தராஜ் (46) சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக இதுபற்றி அவர் தர்மகர்த்தா இளையராஜாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    தர்மகர்த்தா இளையராஜா வந்து பார்த்தபோது கோவிலின் கிரில் கேட்ைட மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்ததை அறிந்தார். மேலும் மரக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சாமி சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தாலி, பொட்டு, செயின் உள்ளிட்ட 2 பவுன் நகைகள் மற்றும் கோவிலுக்கு வெளியே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளையராஜா பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 

    • குந்தலாம்பிகை கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்து ஒகளூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அபராத ரட்சகர் உடனுறை சுகுந்த குந்தலாம்பிகை கோவிலில் கார்த்திகை மாதம் சோம பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷே–கம் நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஆலத்தூர்கேட் பஸ் ஸ்டாப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தப்பட்டது
    • கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதில் ஆலத்தூர் கேட் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

    திருச்சி முதல் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆலத்தூர் ஊர் இருபுறமும் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம் .

    கிழக்கு பகுதியில் அரசு ஆரம்ப பள்ளியும், நியாய விலைகடையும் உள்ளது. மேற்கு பகுதியில் பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் தோட்டக்கலை அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது .நாளொன்றுக்கு 5ஆயிரம் கிராம பொது மக்கள் அச்சாலையை கடக்க வேண்டியுள்ளது.

    இதனால் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து, உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் மேம்பாலம் வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
    • 120 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் குட்டத்தில் நரிக்குறவர் சங்க நிர்வாகிகள் கணேசன், நம்பியார் ஆகியர் தலைமையில் நரிக்குறவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

    எறையூர் நரிக்குறவர் காலனியில் நாங்கள் கடந்த சுமார் 46 ஆண்டுகள்களுக்கு மேலாக உழுது பயிர்செய்து வந்த 353 ஏக்கர் நிலத்தை தற்பொழுது தாங்கள் சிப்காட் தருவதாக கூறியுள்ளீர்கள். எம்.பி. ஆ.ராசா 150 ஏக்கர் நிலத்தை 150 பேருக்கு தருவதாக கூறினார் ஆனால் இன்னும் வழங்க வில்லை, நீங்கள் சிப்காட்க்கு எந்த நிலத்தையும் தரகூடாது. அவற்றை ரத்து செய்ய வேண்டும். எங்களின் பணிவான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் வீதம் நிலமும், பட்டாவும் 120 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிப்படை வசதி

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், வயலூர் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், வயலூர் கிராமத்தில் கழிவுநீர் வசதி இல்லை, சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. எனவே இக்கிராமத்தில் அடிப்படை வசதியான சாலைவசதி, கழிவுநீர்வடிக்கால் வசதி போன்றவைற்றை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
    • 3 நாட்களாக சர்வர் பிரச்சனை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மூலம் சிக்னல் பெற்று செட்டாப் பாக்ஸ்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக கேபிள் டிவி இணைப்பு வழங்கி சேவை செய்து வருகிறோம். சில மாதங்களாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்காமல் பல வாடிக்கையாளர்களை இழந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 19ம்தேதி அதிகாலை 5மணி முதல் 3 நாட்களாக இதுவரை சர்வர் பிரச்சனையில் கேபிள் டிவி கனெக்சன் கிடைக்கவில்லை.

    இதனால் அரசு கேபிள் டிவி கனெக்சன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் டிவி பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சர்வர் பிரச்சனையை சரி செய்து அரசு கேபிள் டிவி கனெக்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ×