search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ. 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
    X

    காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ. 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

    • காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ. 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது
    • சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே காரை கிராமத்தில் அரசுமேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தபள்ளியில் காரை தெரணி வரகுபாடி புதுக்குறிச்சி நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 485 மாணவர்க ள்பயின்றுவருகின்றனர்.நல்ல சுற்றுச்சூழலுடன் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் பள்ளி முடிந்த பிறகும் விடுமுறைநாட்களில் சமூகவிரோதிகள் நுழைந்து மதுஅருந்துவதும் மது அருந்திய பாட்டில்க ளை அங்கேயே விட்டு செல்வதுமாக இருந்துள்ளனர். மறுநாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் போது வளாகத்திற்குள் மதுபாட்டில்கள் கிடப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

    இதனை தடுக்க வேண்டும் என நினைத்த பள்ளிதலைமை ஆசிரியர் அக்பர்கான் தலைமையிலான ஆசிரியர்கள், காரை பகுதிகளில் சமூகப்பணி செய்துவரும் கலைவேந்தன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் கலைவேந்தன் சொந்தசெலவில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 சிசிடிவி கேமராக்களை பள்ளி வாளகத்தில் அமைத்து க்கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வருவது அடியோடு தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதியும் மகிழ்சியும் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் கலைவேந்தனிடம் கேட்ட போது பிற அரசுபள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்ததை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே வரகுபாடி கிராமத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் வறியவர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து கால்நடை(மாடு)வாங்கி இலவசமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×