என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கலாம்
    • இணையவழி மூலம் மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பொதுமக்கள் யாரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் அனுப்பி வைக்க கூறினாலோ, பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், ஆன்லைன் ரம்மி, லோன் ஆப் போன்றவற்றில் ஆசை வார்த்தைகளை கூறினாலும், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பண மோசடி புகார்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரத்திற்குள் "1930" என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • டிரைவர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்
    • லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது

    பெரம்பலூர்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூருக்கு பயணிகளுடன் ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை அரியலூர் மாவட்டம், காமரசவல்லி அருகே மாத்தூரை சேர்ந்த ஜெகத்ரட்சகன் (வயது 31) என்பவர் ஓட்டினார்.நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் முன்னால் சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.இந்த விபத்தில் பஸ் டிரைவர் ஜெகத்ரட்சகன் மற்றும் 18 பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், மங்களமேடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 19 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை நடைபெறுகிறது
    • சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா நடைபெற உள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 30 மணிக்கு பள்ளியின் வளாகத்தில் நடைபெற உள்ளது என பள்ளி தாளாளர் பி. முருகேசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூரில் மிகச் சிறப்பாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் கார்த்திக் ராஜா , ராதிகா ஜெகதீஸ்வரி, செல்வமணிகண்டன், நிரஞ்சன், இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் இன்ஜினியர் ராம்குமார், திருச்சூரில் கனரா வங்கியின் உதவி மேலாளராக பணிபுரியும் சினேகா பொய்யாமொ ழியு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் 2021 -2022 கல்வி ஆண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி நிசாந்தி பெயரில் நிஷாந்தி பிளாக் என்று பெயரிட்டவளாகத்தை மாணவி கையால் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். பள்ளியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஆசிரியர்கள் ஒன்பது நபர்களுக்கு ஹீரோ ஸ்கூட்டி வழங்கப்படும் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பி முருகேசன், நிறுவனர் பரமசிவம், முதல்வர் உமா மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.இவ்விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோ ர்கள்கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசின் சாதனைகள்
    • புகைப்பட கண்காட்சி நடந்தது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது
    • பொதுப்பாதையை தனியாருக்கு பட்டா செய்து கொடுத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூரை அடுத்த வடக்கு மாதவி ஏரிக்கரையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனியாருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்ததாக கூறி, வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்தும், பட்டாவை ரத்து செய்து பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சிவானந்தம் உள்பட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியில் அனைத்து நிலங்களையும் சர்வேயர் மூலம் நில அளவை செய்து, நிரந்தரமாக பொதுப்பாதைக்கு வழிவகை செய்வதாக உறுதி அளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இன்று (புதன்கிழமை) நிலத்தை அளக்க வரவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
    • மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் நான்கு ரோடு அருகே உள்ள மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேங்மேன் பயிற்சியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு விருப்ப இடமாறுதல் உத்தரவை விரைந்து வழங்க வேண்டும். விடுப்பு பயணப்படி சலுகைகளை வழங்க வேண்டும். விரிவாக்க பணிகள் மட்டும் வழங்க வேண்டும். பணி வரையறை செய்து உத்தரவு வழங்க வேண்டும். கள உதவியாளராக பணி மாற்றம் செய்திட வேண்டும். மின்விபத்தை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி முறையாக பாதுகாப்பு வகுப்பு நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். பயிற்சி காலத்தை 2 ஆண்டுகள் என்பதை 3 மாத காலமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், வட்ட பொருளாளர் கண்ணன் உள்பட அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது
    • பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    பெரம்பலூர்

    திருச்சி திருவானைக்காவல் காந்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(வயது 58). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரியின் கணவர் சுந்தரம் இறந்துவிட்டார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக ராஜேஸ்வரி, பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் நடுத்தெருவில் உள்ள தனது சகோதரர் கமலக்கண்ணன் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.ராஜேஸ்வரிக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதற்காக அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காண்பித்து விட்டு மாத்திரைகளை பெற்றுக் கொண்டு கமலக்கண்ணனுடன் ேமாட்டார் சைக்கிளில் சிறுவாச்சூருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.பெரம்பலூரில் பாலக்கரை பகுதியில் உள்ள வேகத்தடை மீது கமலக்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது ராஜேஸ்வரிக்கு மயக்கம் ஏற்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக ராஜேஸ்வரியின் மகள் கல்பனா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    • மத்திய மண்டல ஐ.ஜி தகவல்
    • தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    பெரம்பலூர்,

    தொண்டப்பாடி கிராமத்தில் மாணிக்கம், அவரது மனைவி மாக்காயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, நிருபர்களிடம் கூறியதாவது;-இரட்டை கொலை தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கொலை சம்பந்தமாக இரண்டு விதமான விசாரணையை தொடங்கி உள்ளோம். நகை, பணத்தை கொள்ளையடிப்பதற்காக வந்தவர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக, உறவினர், உள்ளூர்வாசிகளே யாராவது இந்த கொலைகளை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக மிளகாய் பொடியை தூவிவிட்டு குற்றவாளிகள் சென்றுள்ளதால், பழைய குற்றவாளிகளா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட கலெக்டரிடம் மனு
    • திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சுரங்கப்பாதை

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடாலூர் கிராம ஊராட்சி பொதுமக்கள் சார்பாக வருவாய் அலுவலரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் அமைத்து வருகின்றனர்.  இதனால் பாடாலூர் ஊராட்சியின் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கிழக்கு பகுதியில் உள்ள அவர்களின் காடுகளுக்கு செல்வதற்கும், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடம், வங்கி, கால்நடை மருந்தகம், பால் பண்ணை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவதற்கும் வசதியாகவும், விபத்துகளை தடுப்பதற்காகவும் பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மின்வாரியம் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மேலப்புலியூர், மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • தீராத வயிற்று வலி
    • சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    வேப்பந்தட்டை

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பேபி(வயது 32). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் கடந்த 23-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பேபி உயிரிழந்தார். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை திருமணம் நடந்தால் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது
    • கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளா தேவி தலைமையில் போலீசார் சார்பில் காணொலி தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெரம்பலூர் அரசு மருத்துவமனை டாக்டர் பூபதி கூறுகையில், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால், அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் எடை குறைதல், ரத்த சோகை, ரத்த அழுத்தம், குறை பிரசவம், குறை பிரசவத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெண்களுக்கு திருமண வயது வந்தபிறகே பெற்றோர் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா கூறுகையில், அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. எனவே பெண் குழந்தை திருமணத்தை தடுப்போம், என்று கூறியிருந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கூறுகையில், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்தால், மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தகவல், புகார் தொிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×