கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலம் மீட்பு

தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார் கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலம் மீட்பு
Published on

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் குன்னம் ஆய்வாளர் சுசிலா, கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com