என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெண்களை மிரட்டி பணம் பறித்து கைது
    • குண்டர் சட்டத்தில் என்ஜினீயருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் விமல் (வயது 31) இன்ஜினியர். விமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்துவதோடு, அருவருக்கத்தக்க கொச்சை வார்த்தைகளால் பேசி, தாக்கியதோடு 50 பவுன் நகையும், லட்சக்கணக்கான பணம் வரதட்சணையாக கேட்டு கொடுமை படுத்தி உள்ளார்.இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் விமல் மது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விமலின் செல்போனை பார்த்த பொழுது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்ததும், அதனை வைத்து அவர்களிடம் மிரட்டி விமல் பணம் பறித்ததும் தெரியவந்ததையடுத்து போலீசார் விமலை கைது செய்து கிளைச்சிறையில் அடைத்தனர்.எஸ்பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின் பேரில் இன்ஜினியர் விமலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் விமலை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
    • கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடை செய்யப்படு நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு பல்வேறு மோசடி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் நெல்லினை தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2160ம், மோட்டா ரக நெல்லிற்கு ரூ. 2115-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.கழனிவாசல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் கோபிநாத் , ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு பின்பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த ராஜா சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான காலி மனை உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அந்த காலிமனை பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய புகை வெளிவந்தது. இதையடுத்து அப்பகுதியினர் அருகில் சென்று பார்த்தபோது அங்கு உடல் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனடியாக நிலத்தின் உரிமையாளர் ராஜா சிதம்பரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலுக்கு அருகிலேயே மண்எண்ணெய் கேன் ஒன்றும் கிடந்தது. எனவே நள்ளிரவில் அவரை யாராவது மர்ம நபர்கள் கடத்தி வந்து இங்கு வைத்து எரித்து கொலை செய்தார்களா? அல்லது அந்த வாலிபர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிணமாக கிடந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அதே பகுதியில் யாராவது மாயமாகி உள்ளார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முகாமில் 76 பெண் போலீசாரும், 71 போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் என மொத்தம் 147 பேர் பயனடைந்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின் பேரில் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் உடல் பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை செய்தனர். முகாமில் 76 பெண் போலீசாரும், 71 போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் என மொத்தம் 147 பேர் பயனடைந்தனர்.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாவட்ட துணை தலைவர் ராமநாயகம், மாவட்ட இணை செயலாளர் ராஜி, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பழனிசாமி, மாநில துணை தலைவர் சிங்கராயன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கூறி வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட துணை தலைவர் ராஜா வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் ஆஷா பணியாளர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஆஷா பணியாளர்களுக்கு கால வரையறை ஊதியம் வழங்க வேண்டும், ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி மாதம் ரூ.21 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மகாலட்சுமி, மாவட்ட செயலாளராக செல்வாம்பாள், மாவட்ட பொருளாளராக மேகா, மாவட்ட துணை தலைவர்களாக சரிதா, சுமதி, மாவட்ட துணை செயலாளர்களாக அமுதா, ரேவதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஆஷா பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் சனி மகா பிரதோஷம் விழா நடந்தது. இதை முன்னிட்டு ஈசன் மூலவர் உற்சவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், தனலட்சுமி சீனிவாசன் குழும இயக்குநர் மணி, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




    • அகரம்சீகூர் வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது
    • வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

    அகரம்சீகூர்:

    அகரம்சீகூர் அடுத்து வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரிையயொட்டி அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    • பெரம்பலூர் மாவட்டத்தில் அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • பயிற்சியினை வெற்றிக–ரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பள–மாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற–லாம்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:- தாட்கோ மூலம் பெரம்ப–லூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்க–ளுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சியினை வழங்கப்படவுள்ளது. தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலை–யத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகுசாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி–யினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் ஆதிதிரா–விடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிபடிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழு–மையாக முடிக்கும் மாண–வர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியினை பெற்ற–வர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சியினை வெற்றிக–ரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பள–மாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற–லாம். சுய வேலைவாய்ப்பு–திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.comஎன்ற இணை–யதளத்தில் விண்ணப்பித்து பயிற்சி பெற்று பயன்பெற–லாம் என தெரிவித்துள்ளார்.


    • மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • இத்தகவலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன் பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னக்கோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி, வக்கீல்களின் அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனை கண்டித்து அந்த தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாள் என்பதால் நேற்றே வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னத்தில் உள்ள கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.


    • சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் போலீசாரிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார். மேலும் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவில் கைது செய்வது குறித்து போலீசாரிடைேய கலந்தாய்வு நடத்தினார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட போலீசாரில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த 9 போலீசாருக்கும் மற்றும் 11 ஊர்க்காவல் படையினருக்கும் பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். பின்னர் அவர் கடந்த மாதத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடிய 49 போலீசாருக்கு வாழ்த்து மடலை வழங்கினார்.


    ×