என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
    X

    சாலை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாவட்ட துணை தலைவர் ராமநாயகம், மாவட்ட இணை செயலாளர் ராஜி, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பழனிசாமி, மாநில துணை தலைவர் சிங்கராயன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கூறி வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட துணை தலைவர் ராஜா வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

    Next Story
    ×