என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் என்ஜினீயருக்கு சிறை
- பெண்களை மிரட்டி பணம் பறித்து கைது
- குண்டர் சட்டத்தில் என்ஜினீயருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் விமல் (வயது 31) இன்ஜினியர். விமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்துவதோடு, அருவருக்கத்தக்க கொச்சை வார்த்தைகளால் பேசி, தாக்கியதோடு 50 பவுன் நகையும், லட்சக்கணக்கான பணம் வரதட்சணையாக கேட்டு கொடுமை படுத்தி உள்ளார்.இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் விமல் மது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விமலின் செல்போனை பார்த்த பொழுது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்ததும், அதனை வைத்து அவர்களிடம் மிரட்டி விமல் பணம் பறித்ததும் தெரியவந்ததையடுத்து போலீசார் விமலை கைது செய்து கிளைச்சிறையில் அடைத்தனர்.எஸ்பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின் பேரில் இன்ஜினியர் விமலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் விமலை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.






