என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
    • ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலஅமைச்சர் கயல்விழியையும் சந்தித்தார்

    ஊட்டி,

    திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம்ராஜா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் அவர் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பத்மநாபன் ஆகியோரை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நீலகிரி தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் அ.ஜாகிர்உ சேன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
    • கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் அதிமுக 52-வது ஆண்டு துவக்க விழா நடந்தது. அப்போது கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன்,மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கோத்தகிரி.ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், குன்னூர் ஒன்றிய செயலளர்கள் ஹேம்சந்த், பேரட்டி ராஜி,மீனவர் அணி.மாவட்ட செயலாளர் விசாந்த், பேரவை மாவட்ட துணை செயலாளர் வடிவேல், மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளரும், எப்பநாடு ஊராட்சி தலைவருமான சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத்திற்கு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • ஆதரவற்றோர் இல்லம் சார்பில் கொண்டாடப்பட்டது
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    அருவங்காடு,

    குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம் சார்பில் பஸ் நிலையம் முன்பு கலாம் 92-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நீலகிரி சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு, குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரஹீம், மக்கள் நற்பணி மைய தலைவர் கன்டோன்மென்ட் வினோத்குமார், நீலகிரி சோசியல் மீடியா நிறுவனர் சிக்கு, ஹியூமன் ரைட்ஸ் பாபு, ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்சன், மேத்யூ டாக்ஸி நிறுத்தம் நண்பர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • சாலை மற்றும் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்
    • ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட மந்தனை, நஞ்ச நாடு ஊராட்சி கோழிக்கரை ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூ.16.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. தமிழக சுற்றுலா அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அங்கன் வாடி மையங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து பெங்காசிக்கல் பகுதியில் 24 வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3.12 லட்சம் மதிப்பில் குடிநீா் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பாலகொலா ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.62.55 லட்சம் மதிப்பில் மீக்கேரி வரையிலான சாலைப்பணிகள், 15-வது நிதிக்குழு மானியதிட்டத்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பில் ஆழ்துளைகிணறு, எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் பாலகொலா பகுதியில் பல்நோக்கு மைய கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    தொடா்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பாலாடா-நஞ்சநாடு முதல் பெங்காசிக்கல் வரை ரூ.1.26 கோடி மதிப்பில் சாலைப்ப ணிகள், நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    மேலும் நஞ்சநாடு ஊராட்சி, அம்மனட்டி பகுதியில் ரூ. 1.39 கோடி மதிப்பில் வெள்ள தடுப்புச்சுவா் கட்டுமானப் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து இத்தலாா் ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்க ட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் சாா்பில் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தாா். பின்னர் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.36.72 லட்சம் மதிப்பிலான நடைபாதை கழிவுநீா் கால்வாய்ப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஊட்டி கோட்டாட்சியா் மகராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உமாராஜன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவா் மாயன் என்ற மாதன், வட்டாட்சியா்கள் கலைச்செ ல்வி, சரவணக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன், பாலகொலா ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி, துணைத் தலைவா் மஞ்சை மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது.
    • தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ந்த சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

    மேலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கோத்தகிரியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அங்கு இதமான காலநிலை நிலவி வருகிறது. கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    • கோத்தகிரியில் தொடர் கனமழை எதிரொலி

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள போக்குவரத்து சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடுகிறது. மேலும் மலைப்பாதைகளில் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள் உருவாகி உள்ளன.

    குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். அங்கிருந்து பள்ளத்தாக்குகள், வானுயர்ந்த மலைகள் மட்டுமின்றி அடர்ந்த வனப்பகுதிகள், ஆதிவாசி குடியிருப்புகள் மற்றும் மலை ரயில் பாதைகளையும் கண்டு ரசிக்கின்றனர்.

    இதற்கிடையே கோத்தகிரி பகுதியில் இருந்து வரும் தண்ணீர், கேத்தரின் நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசனையொட்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி வருகின்றன.

    • கனமழையின்போது இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை எப்படி மீட்பது என்று செயல்விளக்கம்
    • மலைபாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு புகைப்படம் எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தல்

    அருவங்காடு,

    நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தீயணைப்பு தீயணைப்புநிலையத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கனமழையின்போது எப்படி மீட்பது, இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றுவது ஆகியவை குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை சோதனை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் குன்னூர் மலைப்பாதை மட்டுமின்றி நிலச்சரிவு, மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, மலை பாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க கூடாது, அருவிகளில் குளிக்கவும் செய்யக்கூடாது எனவும் போலீசார் அறிவுரை வழங்கினர்.

    • தென்னிந்திய தேவை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தகவல்
    • 15 நாட்களுக்கு ஒருமுறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்க அறிவுறுத்தல்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக அங்கு 110 தொழிற்சாலைகளும், 35க்கும் மேற்பட்ட பெரிய எஸ்டேட் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு தேயிலைதோட்ட கழகம் மற்றும் இன்கோசர்வ் மூலமாகவும் தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பசுந்தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது:-

    தேயிலை விவசாயிகள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பசுந் தேயிலையை அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அவர்கள் கத்தியை பயன்படுத்தக்கூடாது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமப்புற விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

    மேலும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை வழங்குவதற்கான முயற்சிகளை தென்னிந்திய தேவை வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.14.90 வழங்க வேண்டுமென தேயிலை வாரிய விலை நிர்ணய கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது. எனவே 7 மற்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தேயிலை வாரியம் நிர்ணயித்ததைவிட, தரமான இலைக்கு கூடுதல் விலை கிடைக்கும். எனவே சிறு-குறு விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்துநின்றன
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கல்லட்டி பகுதி உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊட்டி-கல்லட்டி சாலையில் குவிந்தனர்.

    பின்னர் அந்த சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகிறது. தண்ணீர் வராததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகி றோம். எனவே தண்ணீர் வழங்க நடவடிக்ைக எடுக்க என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்து கிறோம் என தெரிவித்தனர்.

    பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சு வர்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவி கள், பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    • மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை தீவிர கண்காணிப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    • சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு, வாகன தணிக்கை சோதனை

    ஊட்டி,

    கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்கள் வயநாடு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனவே கேரளாவில் பதுங்கி உள்ள மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் அந்த மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்காரணமாக அவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவ முயல்வதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளது. எனவே தமிழகம்-கேரளா எல்லைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி களில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பிரபாகர் அங்கு உள்ள சோதனை சாவடி களில் நேரடியாக பார்வை யிட்டு ஆய்வுசெய்தார். அங்கு மேற்கொள்ள ப்படும் சோதனை பணிகள் மற்றும் புதிதாக வரும் வாகனங்களை சோதனை செய்த விவரங்கள் ஆகி யவை குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரபாகர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தமிழகம்-கேரளா எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமா ட்டத்தை கண்காணிக்கும் வகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ள னர். இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு உஷார்ப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் வாகன தணிக்கை சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தமிழகம்-கேரளா எல்லையில் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் தாலுகா உள்ளது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு பகுதியில் தற்போது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    எனவே தமிழகம்-கேரளா வனப்பகுதிகளில் இருமாநில அதிரடி படை போலீசாரும் தொடர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீலகிரியில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கை சோதனை ஆகியவை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
    • அப்பட்டி பகுதியில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் பணிகளை பார்வையிட்டார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் குந்தா ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கிண்ணக்கொரை பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் பிக்கட்டி சமுதாயக்கூடம் முன்பு அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலை, ரூ.5.70 லட்சம் மதிப்பில் அப்பட்டி பகுதியில் நடை பாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய்-உறிஞ்சிக்குழி ஆகிய பணிகளை தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வை யிட்டார்.

    பின்னர் ஓசட்டி பகுதி யில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.9.96 லட்சம் மதிப்பில் 78 வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின்கீழ் வராகப்பள்ளம் நீரோடையில் ரூ.5.45 கோடி மதிப்பிலான கூட்டு க்குடிநீர் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகே ஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சங்கீதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், குந்தா தாசில்தார் கலை ச்செல்வி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்த குமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் ஏற்பாடு
    • மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார் உள்பட பலர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள், மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கப்பச்சிவினோத் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி நகர கழகச் செயலாளர் க.சண்முகம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் மன்ற நகர செயலாளர் ஜெயராமன், நகர அவை தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×