ஊட்டி கல்லட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்துநின்றன போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை
ஊட்டி கல்லட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கல்லட்டி பகுதி உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊட்டி-கல்லட்டி சாலையில் குவிந்தனர்.

பின்னர் அந்த சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகிறது. தண்ணீர் வராததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகி றோம். எனவே தண்ணீர் வழங்க நடவடிக்ைக எடுக்க என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்து கிறோம் என தெரிவித்தனர்.

பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சு வர்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவி கள், பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com