என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் சாமிநாதனுடன் குன்னூர் நகராட்சி துணைத்தலைவர் சந்திப்பு
- தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலஅமைச்சர் கயல்விழியையும் சந்தித்தார்
ஊட்டி,
திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம்ராஜா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவர் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பத்மநாபன் ஆகியோரை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது நீலகிரி தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் அ.ஜாகிர்உ சேன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story






