search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.13 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள்- சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
    X

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.13 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள்- சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

    • சாலை மற்றும் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்
    • ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட மந்தனை, நஞ்ச நாடு ஊராட்சி கோழிக்கரை ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூ.16.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. தமிழக சுற்றுலா அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அங்கன் வாடி மையங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து பெங்காசிக்கல் பகுதியில் 24 வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3.12 லட்சம் மதிப்பில் குடிநீா் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பாலகொலா ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.62.55 லட்சம் மதிப்பில் மீக்கேரி வரையிலான சாலைப்பணிகள், 15-வது நிதிக்குழு மானியதிட்டத்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பில் ஆழ்துளைகிணறு, எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் பாலகொலா பகுதியில் பல்நோக்கு மைய கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    தொடா்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பாலாடா-நஞ்சநாடு முதல் பெங்காசிக்கல் வரை ரூ.1.26 கோடி மதிப்பில் சாலைப்ப ணிகள், நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    மேலும் நஞ்சநாடு ஊராட்சி, அம்மனட்டி பகுதியில் ரூ. 1.39 கோடி மதிப்பில் வெள்ள தடுப்புச்சுவா் கட்டுமானப் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து இத்தலாா் ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்க ட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் சாா்பில் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தாா். பின்னர் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.36.72 லட்சம் மதிப்பிலான நடைபாதை கழிவுநீா் கால்வாய்ப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஊட்டி கோட்டாட்சியா் மகராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உமாராஜன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவா் மாயன் என்ற மாதன், வட்டாட்சியா்கள் கலைச்செ ல்வி, சரவணக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன், பாலகொலா ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி, துணைத் தலைவா் மஞ்சை மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×