கோத்தகிரியில் கனமழை-அணைகள் வேகமாக நிரம்புகின்றன

கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது. தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து
கோத்தகிரியில் கனமழை-அணைகள் வேகமாக நிரம்புகின்றன
Published on

அரவேணு,

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ந்த சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

மேலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கோத்தகிரியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அங்கு இதமான காலநிலை நிலவி வருகிறது. கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com