என் மலர்tooltip icon

    நீலகிரி

    • முதலில் பேட்டிங் செய்த மசினகுடி யூத் கிளப் அணி 10 ஓவா்களில் 63 ரன்கள் குவித்தது
    • 9.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்து அசத்தல்

    ஊட்டி,

    ஊட்டி அருகே மசினகுடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. மாயாா், பொக்காபுரம், ஆச்சக்கரை, பூதநத்தம், செம்ம நத்தம், மாவனல்லா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, ஆனைகட்டி, சிறியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த 25 அணிகள் கலந்து கொண்டன.

    நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அரை இறுதி ஆட்டத்துக்கு மசினகுடி ஸ்டாா் பாய்ஸ் - மாயாா் அணிகளும், மசினகுடி யூத் கிளப் - மசினகுடி புளூ போ்ட்ஸ் அணிகள் தகுதி பெற்று விளையாடின.

    அதில் மாயாா் அணியும் - மசினகுடி யூத் கிளப் அணியும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று விளையாடின.முதலில் பேட்டிங் செய்த மசினகுடி யூத் கிளப் ணிஅ நிா்ணயிக்கபட்ட 10 ஓவா்களில் 63 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய மாயாா் அணி 9.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    முதலிடம் பெற்ற மாயாா் அணிக்கு கோப்பை ரூ.20 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மசினகுடி யூத் கிளப் அணிக்கு ரூ.12,500 ரொக்கமும், கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த மசினகுடி ஸ்டாா் பாய்ஸ் அணிக்கு ரூ.7500 ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கூடலூா் எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது

    அருவங்காடு,

    சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு தொடர்பான இருசக்கர வாகன பிரசார பேரணி நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இந்த பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி நேற்று குன்னூர் வந்தது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை நடந்த பேரணியை மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். பேரணி குன்னூரில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஊட்டியை அடைந்தது.

    நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி செயலளார் பரமேஸ்குமார், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர வாசிம் ராஜா, நகராட்சி உறுப்பினர்கள் ஜாகிர், சையது மன்சூர், கட்சி நிர்வாகிகள் பிரவீன், செலின் மற்றும் நிர்வாகிகள பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டன
    • அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகூர் ஊராட்சி அண்ணாநகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் கணினிகளை வழங்கினார்.

    அத்துடன் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சிக்கன் பிரியாணி, முட்டை, இனிப்பு என அறுசுவை உணவை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஏழை எளிய மக்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். தி.மு.க. குந்தா ஒன்றிய துணை செயலாளர் போர்த்தி ஜெகதிஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  

    • நீலகிரி மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் தலைமை தாங்கினார்
    • மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் பங்கேற்பு

    ஊட்டி,

    குன்னூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சிகள் பூத் கமிட்டி புத்தகங்களை நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளளரும், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளருமான பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

    இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழ உறுப்பினர் மாதன் மற்றும் மாநில, மாவட்ட சார்பணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரிய செயலாளர், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
    • தலைமை ஆசிரியர் வசந்தா, ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

    ஊட்டி,

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநிலம் முழுவதும் உள்ள சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் வழங்கினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒன்றியத்தில் உள்ள பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ரீட்டாசகாயமேரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கோமதி தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். வட்டார கல்வி அலுவலர் வனிதா பாராட்டினார். தலைமை ஆசிரியருடன் ஆசிரியர்கள் சுந்தரம், ரீட்டா சகாயமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    கேடயம் பெற்ற பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், பாராட்டினர். 

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமையில் நடந்தது
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமை தாங்கினார். குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பாண்டி செல்வம், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், லாரன்ஸ், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, பேரூர் செயலாளர்கள் சஞ்சீவ், கிருஷ்ணகுமார், ரமேஷ், கண்ட்டோண்ட்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ் குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு.வாசிம் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், சதக்கத்துல்லா ,சீலா கேத்தரின், செல்வம், காளிதாஸ் மற்றும் குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பழனிச்சாமி, சார்லி, கருணாநிதி மாவட்ட ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் ராம்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பத்மநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் தலைமை கழக பேச்சாளர் ஜாகீர், குன்னூர் நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பாக நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

    • மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்
    • தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு குறித்து அதிகாரிகள் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதிவரை நடக்க உள்ளது. இதன் 3-வது நாள் நிகழ்ச்சி கூட்டுறவு விற்பனை சங்க மண்டபத்தில் நடந்தது.

    அப்போது கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்குதல்-மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்.

    ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், வாழ்வியல் மற்றும் தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ரா.மது, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியரும், கூட்டுறவு சார்பதிவாளருமான அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நவம்பர் மாதம் 2-வது வாரமே தொடங்க வேண்டியது
    • டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

    ஊட்டி,

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஒருசில மாதங்கள் தவிர மற்ற காலங்களில் இதமான காலநிலை நிலவும்.

    எனவே தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் திரண்டு வருகின்றனர். அங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு தொடங்கும். இது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும்.

    அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் 2-வதுவாரம் முதல் ஜனவரி மாத இறுதிவரை உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    மேலும்ஊட்டி, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பைக்காரா, சோலூர், கிளன்மார்கன், எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, தாய்சோலை போன்ற இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்படும்.

    அத்தகைய நேரங்களில் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில்பகல் நேரங்களில் பனிக்காற்று வீசும். எனவே வெயில் அடித்தாலும்கூட குளிர் வாட்டும்.

    மேலும் பனிப்பொழி வின்போது கோரகுந்தா மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிளில் '0' டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்து காணப்படும்.

    அங்கு தற்போது உறைபனி காலம் இன்றும் தொடங்கவில்லை. கண்ணா மூச்சி காட்டி வருகிறது. எனவே ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்திற்கு மேல் உறைபனி மொத்தமாக கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் மலைக்காய்கறி உள்ளிட்ட விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு உறைபனி கொட்டும்போது சாகுபடி மற்றும் மகசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் நீலகிரியில் உறை பனிக்காலம் தொடங்கினால் அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும். 

    • ஏற்கனவே 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது
    • 25, 26-ந்தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    ஊட்டி,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2024, 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற உள்ளது.

    இதன்படி 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 27.10.2023 முதல் 9.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இது தொடர்பாக ஏற்கனவே 4.11.2023, 5.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது, 18.11.2023-ஐ தமிழ்நாடு அரசு வேலை நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைத்திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கடைசி நாள் 9.12.2023 ஆகும். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு, எதிர்வரும் 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 மாதங்களாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

    மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள், பல ஆயிரம் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை கூட தினமும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மின்தடை ஏற்படுகிறது.

    பொதுவாகவே லேசான மழை தூறல் ஏற்பட்டாலே நீலகிரியில் மின்தடை ஆவது சர்வ சாதாரணமான விஷயம் என மக்கள் பழகி விட்டனர். ஆனால் கடந்த இரண்டொரு மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக மின்தடை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால் மக்களும், வர்த்தக நிறுவனங்கள் பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    • தோட்டத்தில் வேலை பார்த்தவரை தும்பிக்கையால் தாக்கியது
    • ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் தீவிர சிகிச்சை

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடகெங்கரை மந்தட்டியைச் சேர்ந்த செவனன் மனைவி வெள்ளையம்மாள் (வயது 63). இவர் நேற்று காலை தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்தார்.

    அப்போது புதர் மறைவில் இருந்து திடீரனெ வெளியே வந்த ஒரு காட்டுயானை துதிக்கையால் தாக்கிவிட்டு சென்றது. இதில் வெள்ளையம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ளது கோழித்துறை பகுதி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது40). கூலித்தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ராணி(35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    தினமும் ரகுநாதன் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.

    அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.

    மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×