பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி- ஊட்டி யூனியன் தலைவர் மாயன் அசத்தல்

மாணவ-மாணவிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டன அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி
பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி- ஊட்டி யூனியன் தலைவர் மாயன் அசத்தல்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகூர் ஊராட்சி அண்ணாநகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் கணினிகளை வழங்கினார்.

அத்துடன் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சிக்கன் பிரியாணி, முட்டை, இனிப்பு என அறுசுவை உணவை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஏழை எளிய மக்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். தி.மு.க. குந்தா ஒன்றிய துணை செயலாளர் போர்த்தி ஜெகதிஸ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com