என் மலர்
நீலகிரி
- நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
- அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேர் பவனி ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலய தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆங்கில வழிமுறை திருப்பலி நடைப்பெற்றது. பின்னர் மலையாள வழிமுறை திருப்பலியும், அதனை தொடர்ந்து தமிழ் வழிமுறையில் திருப்பலியும் நடைப்பெற்றது.
பின்னர் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் அன்பில் விருந்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அந்தோணியாரை கட்டுமரக் கப்பலில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்,
குன்னூர் மவுண்ட் ரோடு வழியாக மார்கெட், பஸ் நிலையம், வி.பி. தெரு வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பாடல்கள் பாடியும், உப்புக்கல்லை இறைத்தும் பொது மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர், இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்தோணியர் ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் எந்த நேரத்தில் கரடி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வசித்து வருகிறார்கள்.
- மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த கரடி அங்கிருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஓணிகண்டி, மட்டகண்டி பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அவ்வாறு வனத்தை விட்டு வரும் கரடிகள் குடியிருப்புக்குள் சுற்றி திரிவதுடன், வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருக்க கூடிய அரிசி பருப்பு, மாவு, எண்ணெய் வகைகளை ருசி பார்த்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் எந்த நேரத்தில் கரடி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வசித்து வருகிறார்கள்.
ஓணிகண்டி அண்ணா மலைப்பகுதியை சேர்ந்தவர் துரை. இவர் நேற்றிரவு வழக்கம்போல குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு வேளையில் வீட்டின் சமையல் அறைக்குள் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் எழுந்து சென்று பார்த்தார். அப்போது கரடி ஒன்று அங்கிருந்த தின்பண்டங்களை எடுத்து ருசி பார்த்து கொண்டிருந்தது.
இதனை கண்டதும் அதிர்ச்சியான துரை சத்தம்போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த கரடி வீட்டை விட்டு வெளியில் வந்து அங்குள்ள புதருக்குள் சென்று மறைந்து கொண்டது. இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
ஆனால் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த கரடி அங்கிருந்த பொருட்களை தின்று சேதப்படுத்தியது. இதனை கண்ட மூதாட்டி சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
பின்னர் அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தகரத்தை தட்டியும், தீ மூட்டியும் கரடியை அங்கிருந்து விரட்டினார்கள். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வீடுகளில் கரடி புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த பகுதியில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடியை விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர்.
- ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான காலநிலை நிலவுகிறது. கோடை விடுமுறை முடிந்து கடந்த 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், வார விடுமுறை நாளான நேற்று ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தார்கள்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர். மலர்களை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பெரணி இல்லம், கள்ளி செடிகளை பார்வையிட்டனர். அலங்கார வேலிகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடங்களில் நின்றபடி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மலர்கள், அலங்கார செடிகளுடன் கூடிய செல்பி ஸ்பாட் முன்பு குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் படகு இல்ல சாலையில் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், கேத்தி பள்ளத்தாக்கு, மேட்டுப்பாளையம், குன்னூர் நகரம், அணை பகுதிகள், மாநில எல்லைகள் உள்ளிட்ட இடங்களை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, தேயிலை பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. நடப்பு மாதம் இதுவரை 2 லட்சத்து 200 சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து உள்ளனர்.
அரவேணு:
நெடுகுளா ஊராட்சி கப்பட்டியில் தோட்டகலை துறை மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை ஏற்று தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் விவசாயிகள் நலத் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் கோத்தகிரி துணை தோட்டக்கலை அலுவலர் ஜெயகுமார், உதவி தோட்டக்கலை அலுவலர் சவுமியா ஆத்மா திட்டம் அலுவலர் மணிமேகலை மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சமுதாய வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணன், கிராம வளர்ச்சி அலுவலர் சுதாகரன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு மண்பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் இலவச தெளிப்பு நீர் பாசன கருவி வழங்கும் திட்டம் குறித்து எடுத்து கூறினர். இப்பயிற்சியில் இதில் தோட்டக்கலை துறை அலுவலர் சந்திரன், முன்னோடி விவசாயி நடராஜ், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், விவசாய குழு மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஊட்டி:
சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்ததால் ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு மலை ெரயில் சேவை இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-ஊட்டியில் கோடை சீசனையொட்டி ரவுண்ட் டிரிப், ஜாலி ரெய்டு என்ற பெயா்களில் ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ெரயில் சேவை கடந்த மே 22-ந் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை என 5 நாள்களில் தினசரி 3 முறை இந்த சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. ஜூலை 21-ந் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த சிறப்பு மலை ெரயில் சேவையில் எதிா்பாா்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லாததால் இன்று (ஜூன் 19) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது.
- கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு ஆற்றில் இருந்து முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.மாலை 6 மணிக்கு முதல் யாக பூஜை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு பாபணாபிஷேகம், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையில் இருந்து கலசங்கள் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பின்னர் கோ பூஜையும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதலே கோவிலுக்கு பந்தலூர், தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து, சாமி தரிசனம் செய்து சென்றனர்.
அரவேணு:
ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தும்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 45 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. கழிப்பிடம் 300 மீட்டர் தொலைவில் இருப்பதால், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக மனுக்கள் அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பள்ளியின் பக்கத்திலேயே குழந்தைகளுக்கான கழிப்பறை வசதியை செய்து தர வேண்டும் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அரவேணு:
கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அலகு குத்துதல் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தியும், பால்குடம் மற்றும் காவடி மற்றும் பறவைக்காவடி ஏந்தியும் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
- சில சமயங்களில் மனித-விலங்கு மோதலும் நடைபெற்று வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, மான், கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் மனித-விலங்கு மோதலும் நடைபெற்று வருகிறது.
தெங்குமரஹடா புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ் (வயது42). தொழிலாளி. இவர் நேற்று இரவு மசினகுடி அடுத்த பொக்காபுரத்தில் வசிக்கும் தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு வந்தார்.
வரும் வழியில் புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை திடீரென வழிமறித்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை விரட்டி சென்று அவரை தாக்கியது.
இதில் பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பசுவராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
பின்னர் பொதுமக்கள் ஒன்று கூடி யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து பசுவராஜ் அருகே சென்று அவரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பசுவராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
- சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பூங்கா மற்றும் உணவு விடுதிக்குள் மழைநீர் புகுந்தது.
- ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் மழை பெய்ய தொடங்கியது. பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, சூட்டிங் மட்டம், தொட்டபெட்டா, லவ்டேல், எம்.பாலாடா உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் ஊட்டி-காந்தல் இடையே செல்லும் நகர பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பூங்கா மற்றும் உணவு விடுதிக்குள் மழைநீர் புகுந்தது. ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கட்டிடம் கட்ட மண் அகற்றப்பட்ட இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்து. இதனால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்பட்டது.
எம்.பாலாடா பகுதியில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. தொடர் மழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கனமழையால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தாா்.
- ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள பிரேக்ஸ் மேன்களுக்கு இவா்கள் சிக்னல் தருவாா்கள்.
ஊட்டி:
மேட்டுப்பாளையம், குன்னூா், ஊட்டி இடையே இயங்கும் நீலகிரி மலை ரயில் பல் சக்கரத்தின் உதவியுடன் நூறாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வரை 4 பயணிகள் பெட்டிகளும், குன்னூரில் இருந்து மேலும் ஒரு பெட்டியும் சோ்த்து 5 பெட்டிகளாக இயக்கப்படுகிறது.
மலைப் பாதையில் மலை ரயில் இயங்க பிரேக்ஸ் மேன் என்னும் பணி மிக முக்கியமானது. இந்தப் பணிக்கு தைரியமும், நீண்ட கால பணி அனுபவமும் கொண்டவா்களே இது நாள் வரை பணி அமா்த்தப்பட்டு வந்தனா்.
மலைப் பாதையில் ரயில் இயக்கப்படும்போது ஒவ்வொரு பெட்டிக்கும் பிரேக்ஸ் மேன் இருப்பாா்கள். இவா்கள் மலைப்பாதையில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தேவை ஏற்படும் இடங்களில் பிரேக்கை பயன்படுத்துவாா்கள்.
ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள பிரேக்ஸ் மேன்களுக்கு இவா்கள் சிக்னல் தருவாா்கள். அதற்கேற்றாற்போல மற்ற பிரேக்ஸ் மேன்களும் தயாராக இருப்பாா்கள்.
இந்தப் பணியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், முதல் முறையாக, குன்னூரைச் சோ்ந்த சிவஜோதி (45) என்ற பெண் பிரேக்ஸ் உமன் பணியில் அமா்த்தப்பட்டுள்ளாா்.
இவா் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தாா். இந் நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன் தெற்கு ரயில்வே இவரை பிரேக்ஸ் உமன் பணிக்கு ப் பதவி உயா்வு அளித்து உத்தரவிட்டது.
இவா் இந்தப் பணி குறித்து ஏற்கெனவே ஆா்வமாக இருந்ததால் மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ரயில்வே சாா்பில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது, மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் இவா் பிரேக்ஸ் உமன் பணியைத் தொடங்கியுள்ளாா்.
- ஊட்டி கிளப் ரோடு பகுதியில் மழைநீா் வடிகால் ஏற்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினர்.
- உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யும் இடத்தில் மின் இணைப்பு கோரி விவசாயிகள் வழங்கிய மனுக்கள் தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி:
தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவா் கோவி.செழியன் மற்றும் குழு உறுப்பினா்கள் மு.பெ.கிரி, ஆ.கோவிந்தசாமி, எம்.வி.பிரபாகரராஜா, சா.மாங்குடி ஆகியோா் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவா் கோவி.செழியன் கூறியதாவது:-
ஊட்டி கிளப் ரோடு பகுதியில் மழைநீா் வடிகால் ஏற்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல, அரசினா் தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் தொழிலாளா்களை சந்தித்து, தொழிலாளா்களின் கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஊதிய உயா்வு ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தோம். இக்கோரிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
உருளைக் கிழங்கு உற்பத்தி செய்யும் இடத்தில் மின் இணைப்பு கோரி விவசாயிகள் வழங்கிய மனுக்கள் தொடா்பாக நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கேரட் பயிரிடும் விவசாயிகளை நேரில் சந்தித்து, தோட்டக்கலைத்துறையின் மூலம் விதைகள் வழங்கி பயிரிடும் முறையினை கேட்டறிந்து, விவசாயிகளுக்கு அரசு மூலம் செய்ய வேண்டிய தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
விவசாயிகள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை தரம் பிரிக்கும் எந்திரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடா்ந்து, ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் பேரவை மனுக்கள் குழுவால் பெறப்பட்ட 60 மனுக்கள் மீதும், ஏற்கெனவே நிலுவையிலிருந்த 10 மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரா்களுக்கு துறை அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் செயலாளா் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி எம்.எல்.ஏ. ஆா்.கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன், மனுக்கள் குழுவின் துணைச் செயலாளா் கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.






