என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டாரம் பட்லூர் கிராம கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார். பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு மேலாளர் கோபிநாத் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கட்டைப்பயிர் பராமரிப்பு, நாற்றங்காலில் தரமான நாற்று உற்பத்தி, சொட்டு நீரில் கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், இயந்திர அறுவடை செய்வதற்குரிய தொழில்நுட்பங்கள், கரும்பு எண்ணிக்கை பராமரித்தல் பற்றி கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணசாமி உழவன் செயலி பற்றி பற்றியும், ஆத்மா திட்டம் பற்றியும் கூறினார். பட்லூர் கோட்ட கரும்பு மேலாளர் அருள் முருகன் கரும்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு பற்றி கூறினார். இப்ப பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல், கரும்பு அபிவிருத்தி அலுவலர் அர்ஜுனன், மற்றும் பட்லூர் கரும்பு அலுவலர்கள் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தீ விபத்தில் பொன்னுசாமி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென இந்த பகுதியில் இருந்த ராஜவேல், பொன்னுசாமி ஆகியோர் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.

    இதைப்பார்த்த அனைவரும் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் வரிசையாக இருந்த 5 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி நள்ளிரவு 12 மணிக்குத்தான் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பொன்னுசாமி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் 5 குடிசை வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. டி.வி., பிரிட்ஜ், ஆடைகள், கட்டில், மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

    தீ விபத்து பற்றி தெரியவந்ததும் முன்னாள்அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தீ விபத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்த பொதுமக்களை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அருகில் உள்ள பள்ளியில் இரவு தங்க வைத்தனர்.

    இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா, அல்லது சமையல் செய்த போது எதிர்பாராத வகையில் தீ விபத்து நடந்ததா என்றும் வெப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராசிபாளையம் ஊராட்சி மாமரத்துப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மோகன்ராஜ் (26) என்ற மகனும், சந்தியா (21) என்ற மகளும் உள்ளனர்.

    சந்தியா நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரியவந்ததம் மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 6-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் மேலான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி பல்லடத்தில் இன்று நடந்த கூட்டத்தில் கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.103 ஆக இருந்த ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக உள்ளது.

    • ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளி கவசம்

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர்.

    இதேபோல், செல்லாண்டியம்மன், வண்டிக்காரன்தெரு பகவதியம்மன், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதேபோல் புதுப்பட்டி துலக்க சூடாமணி அம்மன், அழியா இலங்கை அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.

    அபிஷேகம்

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கேழ்வரகு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் கருமாரியம்மன் கோவிலில் சாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் முத்து காப்பட்டி மாரியம்மன், பச்சுடையாம்பட்டி காளியம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள வேங்கமரத்து நாச்சியம்மன், காளப்பநாயக்கன்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. 

    • முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் நல்லதம்பி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர் முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    தக்காளி

    சாலையில் சென்ற போது சாலையோரம் தக்காளி விற்பனை செய்ததை பார்த்த வர், தக்காளி வாங்க இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தின் சீட்டின் பின்புறம் வைத்திருந்த பர்ஸை எடுத்து தக்காளி வாங்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது வாக னத்தில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டு உள்ளார். ஆனால் பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

    இது குறித்து நல்லிபாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். பட்ட பகலில் பெண்ணி டம் பணம் கொள்ளை யடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது.
    • அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளது. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அருவிக்கு செல்லும் பாதை மற்றும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    • அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை‌ கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:பரமத்தி வேலூரில்

    வெள்ளக்கொடி வெற்றிலை விலை உயர்வு

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்த னூர்,பரமத்தி வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    வெற்றிலை விவசாயம்

    வெற்றிலைகள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து நூறு வெற்றிலை கொண்ட ஒரு கவுலியாகவும் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர்-கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கி செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்கின்றனர். வாங்கிய வெற்றிலை சுமைகளை கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    விலை உயர்வு

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்ப யிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ1,700-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.5ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,50 0-க்கும் ஏலம் போனது. வெள்ளைக் கொடி இளம்

    பயிர் வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.

    வாழப்பாடி:

    பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.

    இதுமட்டுமின்றி, படையாச்சி யூர், கல்யாண கிரி, கல்லே ரிப்பட்டி கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் இச்சாலை வழியா கவே, வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி பகுதிகளுக்கு பயணித்து வருகின்றனர்.

    சாலை பழுது

    5 கிராமங்களையும், வாழப் பாடி, ஏத்தாப்பூர் மற்றும் பேளூர் பேரூராட்சி கள் மட்டுமின்றி, கல்வ ராயன்மலை, அருநுாற்று மலை சாலைகளோடு இணைக்கும் பிரதான சாலையாக இருந்து வரும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் சாலை, பல ஆண்டுகளாக பரா மரிப்பின்றி குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது

    இந்த சாலையில் பய ணிக்க முடியாமல் 5 கிராம மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, பழுதடைந்து கிடக்கும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் தார்சாலையை புதுப்பிக்க பெத்தநாயக்கன்பா ளையம் ஊராட்சி ஒன்றிய அதி காரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேளூர் சாணார்பாளையம் பகுதியில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றார்.
    • அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மல்லிகா தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி.கூலித் தொழிலாளி.இவரது மனைவி மல்லிகா(54). இவர் சேளூர் சாணார்பாளையம் பகுதியில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மல்லிகா தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து மல்லிகா மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சேளூர் சாணார்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் (65) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும்
    • கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமிராக்களும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே அரியூர் பஞ்சாயத்தில் மாசி பெரியண்ணன் கோவில் உள்ளது.

    மலை உச்சி

    மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும். முக்கிய நாட்களில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் இங்கு ஆடு, கோழி பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்வர். இந்த நிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    வழக்கம்போல் கோவி லுக்கு வந்த பூசாரி மற்றும் தர்மகர்த்தா ஆகியோர் பூட்டு உடைக்கப்பட்டு இருப் பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சி.சி.டி.வி கேமரா

    உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமிராக்களும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தது.

    மேலும் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியலும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த கோவில் அருகே அலுவலக அறை உள்ளது. இதன் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க், டிவி உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலில் ரூ.20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

    • விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரடி சேர்க்கைக்கு வருகைபுரியும் விண்ணப்ப தார்கள் உரிய 8, 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்
    • பிரதி மாதம் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர். உமா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    2023 - 2024 ஆம் ஆண்டிற்கான அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்நே ரடி மாணவர் சேர்க்கை வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர் கல்விசான்று, ஜாதி சான்று, மாற்று சான்று, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வருகை புரிந்து விண்ணப்பிக்கலாம்.

    குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவருக்கும், அதிகபட்சம் ஆண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்க லாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

    விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரடி சேர்க்கைக்கு வருகைபுரியும் விண்ணப்ப தார்கள் உரிய 8, 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2021 ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 9-ம் வகுப்பு அசல் சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி காலத்தின் பொழுது பின்வரும் தமிழ்நாடு அரசின் சலுகைகள் பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

    பிரதி மாதம் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை.

    விலையில்லா சீருடை, விலையில்லா பாடபுத்தகம் மற்றும் வரை படக்கருவிகள், விலையில்லா காலணி – 1 ஜோடி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா அரசு போக்குவரத்து வசதி

    மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் உள்ளூர் தொழிற்நிறுவனங்க ளில் உதவித்தொகையுடன் கூடிய குறுகிய கால பயிற்சி

    வழங்கப்படும்.

    தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றி கரமாக பயிற்சி முடித்த வர்களுக்கு முன்னணி தொழிற்நிறுவ னங்களில் ஓர் ஆண்டிற்கு ஒப்பந்த முறையில் தொழிற்பழகுந ராக பயில வாய்ப்புள்ளது.

    மேலும் விவரங்களுக்கு நாமக்கல் / கொல்லி மலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலை யத்திற்கு வருகை புரிந்து அல்லது 04286-299597, 04286 - 290297, 7904111101 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×