என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொல்லிமலையில் துணிகரம் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
- மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும்
- கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமிராக்களும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே அரியூர் பஞ்சாயத்தில் மாசி பெரியண்ணன் கோவில் உள்ளது.
மலை உச்சி
மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும். முக்கிய நாட்களில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் இங்கு ஆடு, கோழி பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்வர். இந்த நிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
வழக்கம்போல் கோவி லுக்கு வந்த பூசாரி மற்றும் தர்மகர்த்தா ஆகியோர் பூட்டு உடைக்கப்பட்டு இருப் பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சி.சி.டி.வி கேமரா
உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமிராக்களும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தது.
மேலும் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியலும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த கோவில் அருகே அலுவலக அறை உள்ளது. இதன் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க், டிவி உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலில் ரூ.20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.






