என் மலர்
நீங்கள் தேடியது "namakkaldistrict: பரமத்தி வேலூர் போலீசில் புகார் Complained to Paramathi Vellore Police"
- சேளூர் சாணார்பாளையம் பகுதியில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றார்.
- அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மல்லிகா தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி.கூலித் தொழிலாளி.இவரது மனைவி மல்லிகா(54). இவர் சேளூர் சாணார்பாளையம் பகுதியில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மல்லிகா தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து மல்லிகா மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சேளூர் சாணார்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் (65) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






