என் மலர்
உள்ளூர் செய்திகள்

2023 - 2024 ஆம் ஆண்டிற்கான அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை
- விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரடி சேர்க்கைக்கு வருகைபுரியும் விண்ணப்ப தார்கள் உரிய 8, 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்
- பிரதி மாதம் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் டாக்டர். உமா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-
2023 - 2024 ஆம் ஆண்டிற்கான அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்நே ரடி மாணவர் சேர்க்கை வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர் கல்விசான்று, ஜாதி சான்று, மாற்று சான்று, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வருகை புரிந்து விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவருக்கும், அதிகபட்சம் ஆண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்க லாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரடி சேர்க்கைக்கு வருகைபுரியும் விண்ணப்ப தார்கள் உரிய 8, 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2021 ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 9-ம் வகுப்பு அசல் சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி காலத்தின் பொழுது பின்வரும் தமிழ்நாடு அரசின் சலுகைகள் பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.
பிரதி மாதம் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை.
விலையில்லா சீருடை, விலையில்லா பாடபுத்தகம் மற்றும் வரை படக்கருவிகள், விலையில்லா காலணி – 1 ஜோடி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா அரசு போக்குவரத்து வசதி
மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் உள்ளூர் தொழிற்நிறுவனங்க ளில் உதவித்தொகையுடன் கூடிய குறுகிய கால பயிற்சி
வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றி கரமாக பயிற்சி முடித்த வர்களுக்கு முன்னணி தொழிற்நிறுவ னங்களில் ஓர் ஆண்டிற்கு ஒப்பந்த முறையில் தொழிற்பழகுந ராக பயில வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு நாமக்கல் / கொல்லி மலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலை யத்திற்கு வருகை புரிந்து அல்லது 04286-299597, 04286 - 290297, 7904111101 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






