என் மலர்
நாமக்கல்
- பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
- திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26- ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை தீமிதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பெண் பக்தர்கள் தீ வாரிப்போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை அழகு போடுதல், அக்கினிசட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. நாளை கம்பம் காவிரி ஆற்றில் விடுதலும், இரவு சாப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயிகளின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி அப்பகுதில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களையும், விவசாயி களின் நிலங்களையும் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் நிலங்களை கையகப்படுத்தி னால், வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடக்கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜ.க, கொ.ம.தே.க, தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக சிப்காட் எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மே தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும், நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மோகனூர் ஒன்றியத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்படும். விவசாயமும் பாதிக்கப்படும். அதனால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, விவசாயிகள் சார்பில் தீர்மானம் கொண்டுவர மனு அளித்தனர்.
தீர்மானத்தை பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் சரஸ்வதி, கிராமசபை தீர்மான நோட்டில், சிப்காட் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எழுதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த கிராம சபை கூட்டத்தில், இதே தீர்மா னத்தை நிறைவேற்ற முடியாது என ஊராட்சி தலைவர் கூறியிருந்த நிலையில், நேற்று பொது மக்கள் வலியுறுத்திய தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்டும் பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டது.
- சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால், பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்னசோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், குன்னத்தூர், பாண்டமங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்டும் பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டது.
சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால், பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு அடிக்கடி இதுபோன்று தடை ஏற்பட்டு வருகிறது.
நேற்று மட்டும் 16 முறைக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரியிடம் இது குறித்து கேட்டால், மின்கம்பி செல்லும் வழிநெடுகிலும் தென்னை மரங்கள் இருப்பதாகவும், அடிக்கடி தென்னை மட்டை கம்பிகளில் விழுவதால் மின்தடை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல் உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும் போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.
எனவே இதுகுறித்து உயர் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, தினசரி நீண்ட நேரம் மின்சப்ளை நிறுத்தப்படுவது குறித்து விசாரணை நடத்தி, மின்தடை ஏற்படாமல் மின்சாரம் வழங்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது.
- தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றி சூரிய மின்கம்பி வேலி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரைப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற இளம்பெண் படு கொலை செய்யப்பட்டார். இவரது உறவினரான குழந்தைவேல் மீது சிலர் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்தனர்.
இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் விவசாயத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர்.
இதுமட்டுமின்றி தோட்டத்தின் நுழைவா யிலில் அடைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டில், மின்சாரம் பாய்ச்சி கொலை முயற்சி யிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து குழந்தைவேல் நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதில், வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் சதாசிவம், தமிழரசன், மோகன்ராஜ், ரமேஷ், சந்திரசேகர் மற்றும் அங்கு வேலை செய்யும் ஆட்கள் மீது புகார் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நாமக்கல் ஜே 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் இரு வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது.
- இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரைத் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரைத் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடி, தீர்த்தம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வந்தனர்.
கடந்த 24-ந் தேதி முதல், தினமும் அம்மன் வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, அம்மனுக்கு வடிசோறு படையல் வைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் முன்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. அதையடுத்து, மதியம் 1 மணிக்கு, திரளான ஆண்களும், பெண்களும் பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்ற புனிதநீராடி, 5 கி.மீ. தூரம் ஊர்வலமாக நடந்து வந்து, வரிசையாக நின்று, கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பல பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், உருளுதண்டம் செய்தும், தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். நள்ளிரவு 12 மணிக்கு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மாலை, சந்தனம் அளித்து கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதையடுத்து வாணவேடிக்கை நடைபெற்றது.
இன்று, காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டு நிகழ்ச்சியும், மாலை, 4 மணிக்கு 45 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர், கோவில் செயல் அலுவலர் வினோதினி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
- மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூ டல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செந்தில் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (26) என்பவரின் சகோத ரியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். செந்தில் தனது மைத்துனர் கார்த்தி வீட்டில் தங்கியிருந்து சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தில், கார்த்தி மற்றும் குடும்பத்தினர், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி காவிரி ஆற்று தடுப்பணை பாலம் அருகே குளிக்கச் சென்றனர்.
அப்போது, காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டி ருந்த செந்தில் எதிர் திசையான பாகூர் பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார். பாதி வழி சென்ற அவரால், அதன் பின்னர் நீந்தி செல்ல முடியவில்லை. மேலம் காவேரி ஆற்று தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜேடர்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை வீரர்கள் அப்பகுதியில் இரு கரையிலும் செந்திலின் உடலை தேடிப் பார்த்தனர்.
இரவு சுமார் 8 மணி அளவில் செந்தில் உடல் சோழசிராமணி பகுதியில் ஒதுங்கி இருந்தது. இதை யடுத்து தீயணைப்புத் துறையினர் செந்தில் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தி லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பரமத்தி ஒன்றியத்தில் தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பணி மூப்பின் படி பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
இடமாறுதல் பணியில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப் பட்டது. சாணார்பாளையம் கிளை, வெள்ளாளப்பட்டி கிளை, ஏ.ஐ.டி.யு.சி. சந்தைப்பேட்டை கிளை ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
திருச்செங்கோடு நகர கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் எஸ்.சுகுமார் கொடியேற்றினார். தேரடி கிளையில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெயரா மன், ரவுண்டானா கிளை யில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை கிளையில் நகர துணை செயலாளர் கார்த்திக், கொட்டக்காடு கிளையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கூட்டப்பள்ளி கிளையில் தங்கராசு, சூரியம்பாளையம் கட்சி அலுவலகத்தில் பால தண்டாயுதம், வாலரைகேட் கிளையில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெய ராமன் கொடியேற்றி னார்கள். தொடர்ந்து திருச்செங்கோட்டில் நான்கு ரத வீதியில் பேரணி நடைபெற்றது. பேரணியில் சுமார் 500 பேர் கொடியுடன் கலந்து கொண்டனர். மழையின் காரணமாக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
- பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாளருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பி.சி.எப் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டியை கபிலர்மலை தி.மு.க ஒன்றிய செயலாளரும், அட்மாகுழு தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான சண்முகம், பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணைத் தலைவரும், பேரூர் நகர செயலாள ருமான பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், பேரூர் தி.மு.க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.
- மே தினத்தை முன்னிட்டு மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் மே தின தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
- அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மே தினத்தை முன்னிட்டு மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் மே தின தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் சங்க கூட்டத்திற்கு வேலூர் தி.மு.க. நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட தொழிற்சங்க தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் தொழி லாளர்களின் நல வாரி யத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழி லாளர் சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- சிறிய முட்டை பெரிய முட்டை நடுத்தர முட்டை என 3 பிரிவாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று நடந்த கூட்டத்தில் 405 காசுகளாக இருந்த முட்டை விலையை 410 காசாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணப்பு குழு வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவித்தது.
சில நேரங்களில் நெஸ்பேக் மற்றும் முட்டை வியாபாரிகள் சங்கத்தினரும் நெக் விலையில் இருந்து மைனஸ் செய்து பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யும் விலையை அறிவித்தனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.
அவற்றை மாற்றி அமைக்க கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் ஆலோசனை கூட்டடம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் முட்டைக்கு மைனஸ் விலை இல்லாமல் நெக் அறிவிக்கும் விலைக்கு மட்டும் தமிழகம் முழுவதும் பண்ணையாளர்களும், வியாபாரிகளும் கடைபிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் நெக் அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டையை பண்ணைகளில் விற்பனை செய்யப்படும். மேலும் சிறிய முட்டை பெரிய முட்டை நடுத்தர முட்டை என 3 பிரிவாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று நடந்த கூட்டத்தில் 405 காசுகளாக இருந்த முட்டை விலையை 410 காசாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த விலை இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் அமுலுக்கு வந்துள்ளது.
- கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
- மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், சின்ன சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், கவுண்டம்பாளையம், சிறுநல்லி கோவில், சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, குரும்பலமகாதேவி, குப்பிரிக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளத்தை. கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் மக்காச்சோள கதிர்களை சந்தை பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வியாபாரிகள் கொண்டு சென்று மக்காச் சோளக் கதிரை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






