என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூரில் 450 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதர், நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில்,

    ஜேடர்பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பாளை யம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி, பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் எழுந்தருளி யுள்ள சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராத னைகளும், சிறப்பு அலங் காரமும் நடைபெற்றது.

    பூஜையில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றிய தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர் சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தகுதி உடைய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இடமாறுதல் பணியில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும். கபிலர்மலை ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரி யர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடும் வகையில் திருத்திய கலந்தாய்வு கால அட்டவ ணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதில் மாவட்ட துணை தலைவர் ரவிக்குமார், ஒன்றிய பொரு ளாளர் முத்து சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து காப்பு கட்டி பண்டாரம், தினமும் இரவு 7 மணிக்கு மேல் தீச்சட்டியை ஏந்தி கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.

    நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இன்று மாலை பொங்கல், மாவிளக்கு திருவிழா நடைபெறுகிறது.

    முன்னதாக காலை 8 மணிக்கு, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில் பால்குடங்களை வைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை, மாரியம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவி யங்களால் அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்தும் பூஜை செய்வர். இரவு வான வேடிக்கையும் நடைபெறுகிறது.

    நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 53.79 1/2 குவிண்டால் எடை கொண்ட 176 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.75.70-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.19-க்கும், சராசரி விலையாக ரூ.74.10-க்கும் என ரூ. 3 லட்சத்து 68ஆயிரத்து 440-க்கு விற்பனையானது.

    • மாவட்ட அளவிலான சிலம்பக் கலைத்திருவிழா மற்றும் மூத்த ஆசான்களுக்கு விருது விழங்கும் விழா, நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியில் நடந்தது.
    • இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 22 அணிகளை சேர்ந்த, 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான சிலம்பக் கலைத்திருவிழா மற்றும் மூத்த ஆசான்களுக்கு விருது விழங்கும் விழா, நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடியில் நடந்தது.

    மாவட்ட சிலம்ப ஆசான்கள் சங்க செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தலைவர் ராஜேந்திரகுமார் வரவேற்றார். தமிழரின் பாரம்பரிய சிலம்பக்கலையின், அனைத்து விதமான குழு விளையாட்டுகள், அலங்கார சிலம்பம், போர் சிலம்பம், புலியாட்டம், தீ பந்தம், குத்து வரிசை போன்ற பல்வேறு சிலம்ப விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 22 அணிகளை சேர்ந்த, 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த சிலம்ப ஆசான்கள் 10 பேரை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

    • வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவ லகத்தில் நடை பெற்றது.
    • முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 ஆண்களும் 18 பெண்களும் என 30 பேர் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    108 ஆம்புலன்ஸசில் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்க ளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவ லகத்தில் நடை பெற்றது.

    முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 ஆண்களும் 18 பெண்களும் என 30 பேர் கலந்து கொண்டனர். இதில் 10 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்படடு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.

    முகாமில் சேலம் மண்டல மேலாளர் குமரன், நாமக்கல் மாவட்ட மேலாளர் அம்பிகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினர்.

    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2000 மஞ்சள் மூட்டைகள் ரூ.80 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் விரலி ரகம் 1450 மூட்டைகளும், உருண்டை ரகம் 500 மூட்டைகளும், பணங்காலி ரகம் 50 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5402 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7075-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5069-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6019-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.2860-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11602-க்கும் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

    • நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே அனிச்சம்பாளையம் என்ற இடத்தில் ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • ராஜேஷ் (வயது 36) என்பவர் காவிரி ஆற்றின் நடுப்பகு தியில் தண்ணீருக்குள் இருக்கும் மணல்களை அள்ளிக் கொண்டிருந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே-கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே அனிச்சம்பாளையம் என்ற இடத்தில் ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    கதவணை கட்டுமான பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையார் பகுதியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த பொக்லைன் எந்திரம் மூலம் பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (வயது 36) என்பவர் காவிரி ஆற்றின் நடுப்பகு தியில் தண்ணீருக்குள் இருக்கும் மணல்களை அள்ளிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றுக்குள் மேடு, பள்ளம் தெரியவில்லை.

    இந்த நிலையில் ராஜேஷ் தண்ணீருக்குள் உள்ள மணல்களை அள்ளிக் கொண்டு சென்ற போது காவிரி ஆற்றுக்குள் பள்ளம் இருப்பது தெரியாமல் பொக்லைன் எந்திரம் நகர்ந்த போது பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. பொக்லைன் எந்திரத்தில் ஏசி பொருத்தப் பட்டி ருந்ததால் டிரை வரின் இருக்கை சுற்றி அடைக்கப்பட்டிருந்தது. இதனால் டிரைவர் ராஜேஷ் தப்பி வெளியே வர முடியவில்லை. பொக்லைன் எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்த அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து உடனடியாக அருகாமையில் பணியாற்றி வந்த ஜே.சி.பி எந்திரத்தை வரவழைத்தனர்.

    ஜே.சி.பி எந்திரம் வந்து பொக்லைன் எந்திரத்தை தூக்கி நிறுத்திய போது அதன் டிரைவர் ராஜேஷ் அவரது இருக்கையில் இருந்து வெளியில் வரும் முடியாமல் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. ராஜேஷின் உடலை மீட்டு காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ராஜேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ராஜேஷ் உடலை பார்த்த அவரது மனைவி மோகனா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜேஷின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • பரமத்தி டாஸ்மாக் கடை அருகே, சென்ற போது நாகராஜுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் லாரி தாறுமாறாக சென்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). இவர் பரமத்தி- மாணிக்கநத்தம் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தனியார் ஆயில் மில்லில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பரமத்தி டாஸ்மாக் கடை அருகே, சென்ற போது நாகராஜுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் லாரி தாறுமாறாக சென்றது. லாரி தாறுமாறாக ஓடியதில் 2 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. ஆனால் லாரி டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டதால் லாரி அப்பகுதியில் உள்ள சாக்கடை ஓடையில் புகுந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக டாஸ்மாக் கடைக்கு வெளியே நின்றவர்கள் மீது மோதாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் டிரைவர் நாகராஜை மீட்டு அருகில் இருந்த பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் பகுதி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.
    • இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, குச்சிபாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், கற்பூரவள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.380-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.320-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.320-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும் விற்பனையானது.

    வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தேசிய சிறு தானிய இயக்கத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • பரமத்திவட்டாரத்தில் இந்த ஆண்டில் பல விவசாயிகள் சிறு, குறு தானியப் பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வறட்சியிலும் வாடாத வரகு சாகுபடி செய்தால் பாடில்லாமல் தருமே வரவு.

    இட்லி, தோசை, அரிசி சாதம் என அரிசி உணவை மட்டுமே உண்பதால், மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தேசிய சிறு தானிய இயக்கத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பரமத்திவட்டாரத்தில் இந்த ஆண்டில் பல விவசாயிகள் சிறு, குறு தானியப் பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர்.

    சாகுபடியை அதிகரிக்க முயற்சி:

    இதனை கருத்தில் கொண்டு சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து, அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறு தானிய இயக்கம் என தனியாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சாமை விதைகள் 4 கிலோ கொண்ட மினிகிட் முழு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை போதுமானது. ஜூன்-ஜூலை (ஆடிப்பட்டம்) மாதங்களில் விதைப்பு செய்ய ஏற்றது. எனவே பரமத்தி வட்டார விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு குறித்த ஆலோ சனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா, கண்காணிப் பாளர் சக்திவேல் முன்னி லையில் நடைபெற்றது.
    • பொதுச்சாலையில் பாதுகாப்பாக இயக்குவது, உரிய ஆவணங்களை முறையாக நடப்பில் வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு குறித்த ஆலோ சனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா, கண்காணிப் பாளர் சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றது,

    கூட்டத்தில் தனியார் பள்ளிகள் சார்பில் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். பள்ளி வாகனங்கள் மோட் டார் வாகன விதிகளுக்கு உட்பட்டும் பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012-க்கும் உட்பட்டு முறையாகவும் பராமரிப்பது, பொதுச்சாலையில் பாதுகாப்பாக இயக்குவது, உரிய ஆவணங்களை முறையாக நடப்பில் வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் கூடுதல் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டு நல்ல முறையில் பயன்படுத்தப்ப டுவது, ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உரிமம் நடப்பில் வைத்திருப்பது ஓட்டுனரின் உடல் தகுதி ஆகியவை குறித்து உரிய அறி வுரைகள் வழங்கப்பட்டது.

    கூட்ட ஆய்வின்போது பள்ளி வாகனங்களை ஆய்வுக் குழு முன்பாக குறிப்பிட்ட தேதியில் ஆஜர் படுத்தி உரிய அனுமதி பெற்று பொது சாலையில் இயக்கப்பட வேண்டியது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வாகனங்கள் உரிய ஆவணங் கள் இல்லாமல் முறையாக பராமரிக்கப்படாமல் பொதுசாலையில் இயக்கப்பட்டால் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு மற்றும் வாகனம் சிறைபிடிக்கப்படும் எனவும் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தெரிவித்தார்.

    ×