என் மலர்
நீங்கள் தேடியது "சாமை விதைகள்"
- மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தேசிய சிறு தானிய இயக்கத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பரமத்திவட்டாரத்தில் இந்த ஆண்டில் பல விவசாயிகள் சிறு, குறு தானியப் பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வறட்சியிலும் வாடாத வரகு சாகுபடி செய்தால் பாடில்லாமல் தருமே வரவு.
இட்லி, தோசை, அரிசி சாதம் என அரிசி உணவை மட்டுமே உண்பதால், மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தேசிய சிறு தானிய இயக்கத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பரமத்திவட்டாரத்தில் இந்த ஆண்டில் பல விவசாயிகள் சிறு, குறு தானியப் பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர்.
சாகுபடியை அதிகரிக்க முயற்சி:
இதனை கருத்தில் கொண்டு சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து, அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறு தானிய இயக்கம் என தனியாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சாமை விதைகள் 4 கிலோ கொண்ட மினிகிட் முழு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை போதுமானது. ஜூன்-ஜூலை (ஆடிப்பட்டம்) மாதங்களில் விதைப்பு செய்ய ஏற்றது. எனவே பரமத்தி வட்டார விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.






