என் மலர்
நீங்கள் தேடியது "Selection for Ambulance Job"
- வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவ லகத்தில் நடை பெற்றது.
- முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 ஆண்களும் 18 பெண்களும் என 30 பேர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:
108 ஆம்புலன்ஸசில் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்க ளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவ லகத்தில் நடை பெற்றது.
முகாமில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 ஆண்களும் 18 பெண்களும் என 30 பேர் கலந்து கொண்டனர். இதில் 10 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்படடு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.
முகாமில் சேலம் மண்டல மேலாளர் குமரன், நாமக்கல் மாவட்ட மேலாளர் அம்பிகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்கினர்.






