search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundam landing ceremony"

    • நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரைத் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரைத் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடி, தீர்த்தம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வந்தனர்.

    கடந்த 24-ந் தேதி முதல், தினமும் அம்மன் வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, அம்மனுக்கு வடிசோறு படையல் வைக்கப்பட்டது.

    நேற்று அதிகாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் முன்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. அதையடுத்து, மதியம் 1 மணிக்கு, திரளான ஆண்களும், பெண்களும் பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்ற புனிதநீராடி, 5 கி.மீ. தூரம் ஊர்வலமாக நடந்து வந்து, வரிசையாக நின்று, கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பல பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், உருளுதண்டம் செய்தும், தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். நள்ளிரவு 12 மணிக்கு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மாலை, சந்தனம் அளித்து கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதையடுத்து வாணவேடிக்கை நடைபெற்றது.

    இன்று, காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டு நிகழ்ச்சியும், மாலை, 4 மணிக்கு 45 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர், கோவில் செயல் அலுவலர் வினோதினி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    ×