என் மலர்
நீங்கள் தேடியது "series resistance"
- 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்டும் பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டது.
- சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால், பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்னசோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், குன்னத்தூர், பாண்டமங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்டும் பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டது.
சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மின்தடையால், பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு அடிக்கடி இதுபோன்று தடை ஏற்பட்டு வருகிறது.
நேற்று மட்டும் 16 முறைக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரியிடம் இது குறித்து கேட்டால், மின்கம்பி செல்லும் வழிநெடுகிலும் தென்னை மரங்கள் இருப்பதாகவும், அடிக்கடி தென்னை மட்டை கம்பிகளில் விழுவதால் மின்தடை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல் உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும் போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.
எனவே இதுகுறித்து உயர் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, தினசரி நீண்ட நேரம் மின்சப்ளை நிறுத்தப்படுவது குறித்து விசாரணை நடத்தி, மின்தடை ஏற்படாமல் மின்சாரம் வழங்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






