என் மலர்
நாகப்பட்டினம்
- குறிச்சி ஊராட்சி கட்டிட வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன.
- பின்னர், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை, தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்டம் குறிச்சி ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட பசுமை சகா டிவைனியா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவி ஜான்சி ராணி, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை ஊராட்சி மன்ற உறுப்பினர் மீனாட்சி சமூக ஆர்வலர்கள் கார்த்திகேயன் மற்றும் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
- சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேதாரண்யம்:
வேதாரணியம் அருகே உள்ள சிறுதலை காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 30).
இவர் வேதாரண்யத்தில் உள்ள தனியார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சம்பவதன்று கடையில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சிறுதலை காடுக்கு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆதனூர் மானங்கொண்டனாரு பாலம் தூண்டிக்காரன் கோவில் அருகே சென்றபோது இவர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் வேதாரண்யம் போலீஸ் சரக டி.எஸ்.பி. சுபாஷ் சந்திர போஸ் ஏற்பாட்டில் தனிப்படை போலீசாரம், வேதாரணிய போலீசாரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
- போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நடைபெற்றது.
- வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்:
இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவும், போரில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புனிதஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் அவர்களுடைய உறவினர்களின் கல்லறை களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து படையலிட்டு, மெழுகு வர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பங்கேற்றனர்.
- சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.
இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவில் விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி, இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர்,தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர் ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆங்காங்கே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்.
- 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் அவுரித்திடலில் கொட்டும் மழையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன், ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் குமார் ரமேஷ், பால சண்முகம், அரசுமணி, ஞானசேகரன், குமார், பிரசன்னா பாபு , வெற்றி வேலன்உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவி ன்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியா க நிரப்பிட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்கா லத்தை வரண்மு றைசெ ய்திட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்றனர்.
- லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.
- சார்பதிவாளர் பாபு உள்பட அனைத்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பாபு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் லஞ்ச முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் சார்பதிவாளர் பாபு உள்பட அனைத்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. தொடர்ந்து 9 மணி நேரம் விடிய விடிய நடந்த இந்த அதிரடி சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 800 ரொக்க பணத்தை கைப்பற்றினர். மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றி சென்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- செந்தில்குமார் அவரது நண்பரான கார்த்திகேயனை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளார்.
- கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை போலீசாரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா மணியன்தீவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 55) விவசாயி.
இவரும் அதே பகுதி நந்தவனகுலதெருவை சேர்ந்த செந்தில் குமார் (வயது 40) என்பவரும் நெருங்கிய நண்பர்கள் நேற்று இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து செந்தில்குமார் நண்பர் கார்த்திகேயனை இரும்பு கம்பியால் அடித்துள்ளார்.
இதில் தலையில் அடி பட்ட கார்த்திகேயன் சிகிச்சைக்காக வேதாரண்யம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் உடலை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் செந்தில் குமார் தலைமறைவானார்.
அவரை வேதாரண்யம் போலீசார் தேடி வந்தனர்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்ஷிங் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் வேதாரண்யம் போலீசார் நண்பரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவான செந்தில்குமாரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- பருவநிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படுகிறது.
- பனிப்பொழிவால் சம்பா சாகுபடி வெகுவாய் பாதிக்கும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக லேசான மழைப்பொழி வோடு அதிகாலை வேளையில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் நாகப்பட்டினம் மாவட்டம்
கீழ்வேளூர், பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.
பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறாக பொய்யும் பனிப்பொழிவு காரணமாக அறுவடைக்கு தயாராகியுள்ள குறுவை நெற்பயிர்கள் மட்டுமின்றி தற்போது விதைக்கப்பட்டுள்ள சம்பா சாகுபடியும் வெகுவாக பாதிக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால் விபத்துகளை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
இந்த பனிபொழிவால் காலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், வீடுகளுக்கு பால் மற்றும் பேப்பர் கொண்டு செல்பவர்களும் அவதிய டைந்தனர்.
- தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
- சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது குத்புதீன் மகன் முகமது வசிப் (வயது 14).
இவர் காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது முகமதுவசிப்பை ஏதோ விஷப்பூச்சி கடித்து அலறி உள்ளார்.
உடன் முகமதுவசிப் பெற்றோர் அவர் தூங்கி இடத்தை சுற்றி பார்த்துள்ளனர்.
எதுவும் கண்ணில் படாததால் திரும்ப தூங்க சொல்லி உள்ளனர்.காலை முகமதுவசிப் சோர்வாகவும்,மயங்கி விழுந்துள்ளார்.
உடன் முகமதுவசிப் அவரது பெற்றோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முகமதுவசிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.
- கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.
அதேபோல் மானாம்பேட்டை சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.
அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.
இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மானம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 49), திருச்செங்காட்டங்குடி தெற்கு தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது 32) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
- தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்றுள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சி வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மனைவி கனகா (வயது 30). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
நேற்று கனகா வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் முருங்கைக்கீரை பறிப்பதற்காக சென்று கீரை பறித்துக் கொண்டிருந்தார் அப்போது கீழே இருந்த பாம்பு கடித்து விட்டது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி கொண்டு போய் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி கனகா இன்று அதிகாலை இறந்துவிட்டார். புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
- பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 75 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலை க்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூ ரியில் மாணவ ர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அண்ணா பல்கலை க்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்க ல்வித்துறை அமைச்சரும், அண்ணா பல்கலை க்கழகத்தின் இணை வேந்தருமான பொன்முடி பட்டு க்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 3 அண்ணா பல்கலைக்கழக பொறியி யல் கல்லூரியை சேர்ந்த 333 மாணவ- மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
முன்பெல்லாம் இன்ஜினியரிங் படிப்ப தற்கு நுழைவு தேர்வு கட்டாயமா க்கப்ப ட்டிருந்தது. இதனால் கிராமப்புற இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கஷ்டப்பட்டு வந்த நிலையை கருத்தில் கொண்டு நுழைவு தேர்வை கலைஞர் ரத்து செய்தார். இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 25,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






