என் மலர்
நாகப்பட்டினம்
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாட்கள் நடைபெறுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி துவங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை 242 வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பறவைகள் காலில் வளையம் இடப்பட்டு
பறவைகள் செல்லும் தூரம் வந்து செல்லும் நாடு குறித்து கணக்கிடப்படுகிறது.
பறவைகள் வந்து செல்லும் இந்த சீசன் காலத்தில் ஜனவரி கடைசி வாரத்தில் பறவை கணக்கெடுக்கும் பணி கோடியக்கரை வனத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது.
வழக்கம் போல இந்த ஆண்டு நாளை, நாளை மறுநாள் இரு தினங்களிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
இதில் ஏ. வி.சி கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் மித்ரா
குழுவினர் கலந்து கொள்கின்றனர்.
இன்று காலை பறவைகள் இனம் கண்டறிய பயிற்சி வகுப்புகளும், தொடர்ந்து மாலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
மறுநாள் 29-ந் தேதி காலை முதன்மை தலைமை வனஉயிரிக் காப்பாளர் சென்னை சேகர் குமார் நிரோஜ் திருச்சி மண்டல தலைமை வனப்பாது காவலர் சதிஷ் மற்றும் நாகை வனஉயிரினக் காப்பாளர் யோகேஸ்குமார் மீனா ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் கலந்து கொள்கிறார்கள் என கோடிக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் உப்புசத்தியா கிரக கட்டிடத்தில் புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு போராடிய வேதாரண்யம் பகுதி தியாகிகள் சர்தார் வேதரத்தினம், நாவிதர் வைரப்பன், நாகநாத தேசிகர், வீரபத்திரன், மாரிமுத்து, சுப்பையா பிள்ளை, ஐ.என்.ஏ. தியாகி பெரியசாமி, செம்போடை கணேசன் ஆகியோர் புகைப்பட கண்காட்சி திறப்புவிழா நடைபெற்றது.
கண்காட்சியை முன்னாள் எம்.பி. பி.வி ராஜேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் நிர்வாகி வேதரத்தினம், உப்பு உற்பத்தியாளர் கேடிலியப்பன், உப்பள தொழிலாளர்கள் சங்க
துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
165 ஆண்டுகள் பழமையான நாகை தலைமை அஞ்சல் நிலையம் வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் 1857&ம் ஆண்டு டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
அப்போது கலையரங்கம் ஆக திகழ்ந்த இடம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில்
1933-ம் ஆண்டில் நாகப்பட்டினம் தலைமை தலைமை அஞ்சல் நிலையம்
ஆக மாற்றப்பட்டது.
165 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகை தலைமை தபால் நிலைய கட்டிடம் விளக்குகளால் ஜொலித்து காணப்படுகிறது.
165 ஆண்டு காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் நாகை தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
தேசியக்கொடியின் வண்ணத்தில் தலைமை தபால் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.
வேதாரண்யத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இந்து முன்னணி சார்பில் அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் வேதபிரசாத் தலைமை தாங்கினார்.
இதில் அகில பாரத மீனவர் பேரவை அமைப்பாளர் வந்தியத்தேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர தலைவர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகை நகராட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சீட்டு கேட்கவில்லை என்று ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான
ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நேர்காணலுக்கு பின்பு ஓ.எஸ் மணியன் எம்.எல்.ஏ. கூறுகையில்:-
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டுகளில் கூட போட்டியிடுவதற்கு பா.ஜனதா கட்சியினர் அ.தி.மு.க.வை நாடவில்லை.
ஆகவே 36 வார்டுகளிலும் அதிமுக நேரடியாக களம் காண இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க.வை விமர்சித்துப் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த நயினார் நாகேந்திரனருக்கு கண்டனம் தெரிவித்தார்.
வேதாரண்யத்தில் விதை பண்ணை வயலில் வேளாண் துறையினர் ஆய்வு நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர் தனது கணவர் துணையோடு இந்தியாவில் உள்ள 1250 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகளை சேகரித்து வருகிறார்.
இந்த ஆண்டு தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். இந்த வயல்களை வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர்.
நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் நவீன்குமார், வேளாண்மை அலுவலர்கள் அமுதாதேவி, கலைச்செல்வன், மோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயலில் ஆய்வுசெய்தனர்.
பின்னர் சாகுபடி செய்துள்ள நெல் ரகங்கள் குறித்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாரம்பரியமிக்க நெல் ரகங்களின் விளைச்சலையும் சிவரஞ்சனியிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ் கூறும்போது:-
பாரம்பரியமிக்க நெல் பயிர் சாகுபடி குறித்து நேரடியாக ஆய்வு செய்தோம்.
தமிழகத்தில் உள்ள 37 விதை பண்ணைகளுக்கு சிவரஞ்சனி சாகுபடி செய்த வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் விதைகளை வாங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து கொள்முதல் செய்ய உள்ளோம் என்றார்.
வேதாரண்யம் பகுதியில் நாளை சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த இரு துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வாய்மேடு, ஆலங்காடு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை ஊர்மக்கள் வரவேற்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாட்டாகுடியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ. இவர் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ-நேபால் தடகள போட்டி ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார்.
இந்நிலையில் நேபாளில் இருந்து தலைஞாயிறுக்கு வந்த தங்க மங்கை ஜெயஸ்ரீக்கு வாட்டாகுடி கிராம மக்கள் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய பேரூர் தி.மு.க சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய குழு உறுப்பினர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், வாட்டா குடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பதம் நீலமேகம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஜெயஸ்ரீ இதுவரை பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் 77 சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் பெற்று உள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வெல்லுவதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.
மாணவி ஜெயஸ்ரீக்கு சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் ஆகியோர் நிதியுதவி செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் கோவில் பெரிய தேர் பவனி நடைபெற்றது
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி பேராலத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் கோவிலில் ஆண்டுப் பெருவிழா கடந்த 20&ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் ஆண்டுதோறும் மூன்று சொரூபங்கள் செல்லும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக செபஸ்தியார் 1 சொரூபம் மட்டுமே எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எளிய முறையில் சென்ற தேர்பவனியில் குறைவான பக்தர்களே பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அதனைதொடர்ந்து தப்பாட்டமும் நடைபெற்றது. எழுச்சி ஏற்பாடுகளை கத்தோலிக்க முக்குலத்தோர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 54 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 2 லட்சத்து 61 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத் தலைவர் மதிவாணன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் துணைவேந்தர் மரியாதை செலுத்தினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் சுதந்திரதின 75-ம் ஆண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு விழாவை திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி வேதரெத்தினம் பேரன் கயிலை மணி வேதாரத்தினம், பல்கலைக்கழக உன்னத பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வேல் முருகன், நாகப்பட்டினம் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் பன்னீர்செல்வம், ப்ரியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநா¢ பிரபு, வேதை சிம்காஸ் பனங்கிழங்கு உணவுகள் உற்பத்தியாளர் கார்த்திகேயன், தியாகி வைரப்பன் மகன் சண்முகம் மற்றும் குருகுல ஆசிரியர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
விழாவில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அங்குள்ள தியாகி சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் உப்புத்துறை அலுவலகத்தில் உள்ள ராஜாஜி சிறைவைக்கப்பட்ட இடத்தையும் பின்பு ராஜாஜி உப்பு அள்ளிய இடத்தில் அமைக்கப்பட்ட நினைவு நினைவுத் தூணுக்கு சென்ற தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகதுணைவேந்தர் கிருஷ்ணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு வந்தே மாதரம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. சர்தார் வேதரத்தினம் ஆரம்பிக் கப்பட்ட குருகுலத்திற்கு சென்று சர்தார் வேதரத்தினம் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அங்குள்ள கோசாலைக்கு சென்று பசு மாடுகளுக்கு கீரை பழங்களை வழங்கினார்.
வேதாரண்யம் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் மீனவர்களை அரிவாளால் வெட்டி ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன் வசந்தபாலன் (வயது 25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.
நள்ளிரவில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரண்டு படகில் வந்தனர்.
திடீரென்று தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறி வசந்தபாலன் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டினர்.
படகில் இருந்த மீன்கள், 2 செல்போன், ஜி.பி.எஸ் கருவி, வலைகள் , படகு இன்ஜின் ஆகிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். இதையடுத்து தாங்கள் வந்த படகில் ஏறி ரப்பர் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.
இந்த கொடூர தாக்குதலில் 4 மீனவர்களும் பலத்த காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காய வலியை பொருட்படுத்தாமல் அவசரம் அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சக மீனவர்களின் உதவியோடு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தில்லைநாதன், மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கும், வசந்தபாலன், நிர்மல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்றுமுன்தினம் இரு வேறு இடங்களில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தற்போது இன்றும் அதுபோல் சம்பவம் நடந்துள்ளது மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன் வசந்தபாலன் (வயது 25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மல், மணிகண்டன், தில்லைநாதன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.
நள்ளிரவில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் இரண்டு படகில் வந்தனர்.
திடீரென்று தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறி வசந்தபாலன் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டினர்.
படகில் இருந்த மீன்கள், 2 செல்போன், ஜி.பி.எஸ் கருவி, வலைகள் , படகு இன்ஜின் ஆகிய ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். இதையடுத்து தாங்கள் வந்த படகில் ஏறி ரப்பர் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.
இந்த கொடூர தாக்குதலில் 4 மீனவர்களும் பலத்த காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காய வலியை பொருட்படுத்தாமல் அவசரம் அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சக மீனவர்களின் உதவியோடு வேதாரண்யம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தில்லைநாதன், மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கும், வசந்தபாலன், நிர்மல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்றுமுன்தினம் இரு வேறு இடங்களில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தற்போது இன்றும் அதுபோல் சம்பவம் நடந்துள்ளது மீனவர்கள் மத்தியில் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்...இன்று மீண்டும் உயர்ந்த தினசரி பாதிப்பு- இந்தியாவில் 2.85 லட்சம் பேருக்கு கொரோனா






