search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவி ஜெயஸ்ரீக்கு ஊர் மக்கள் சார்பில் வரவேற்பு
    X
    வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவி ஜெயஸ்ரீக்கு ஊர் மக்கள் சார்பில் வரவேற்பு

    ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற மாணவி

    ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை ஊர்மக்கள் வரவேற்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாட்டாகுடியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ. இவர் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ-நேபால் தடகள போட்டி ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். 

    இந்நிலையில் நேபாளில் இருந்து தலைஞாயிறுக்கு வந்த தங்க மங்கை ஜெயஸ்ரீக்கு வாட்டாகுடி கிராம மக்கள் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய பேரூர் தி.மு.க சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய குழு உறுப்பினர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், வாட்டா குடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பதம் நீலமேகம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
     
    ஜெயஸ்ரீ இதுவரை பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் 77 சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் பெற்று உள்ளார்.
    ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வெல்லுவதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.

    மாணவி ஜெயஸ்ரீக்கு சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் ஆகியோர் நிதியுதவி செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
    Next Story
    ×