search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்விதை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை  வேளாண்மை துறையினர் பார்வையிட்டனர்.
    X
    நெல்விதை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை வேளாண்மை துறையினர் பார்வையிட்டனர்.

    விதை பண்ணை வயலில் வேளாண் துறையினர் ஆய்வு

    வேதாரண்யத்தில் விதை பண்ணை வயலில் வேளாண் துறையினர் ஆய்வு நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர் தனது கணவர் துணையோடு இந்தியாவில் உள்ள 1250 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகளை சேகரித்து வருகிறார். 

    இந்த ஆண்டு தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். இந்த வயல்களை வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர். 

    நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் நவீன்குமார், வேளாண்மை அலுவலர்கள் அமுதாதேவி, கலைச்செல்வன், மோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயலில் ஆய்வுசெய்தனர். 

    பின்னர் சாகுபடி செய்துள்ள நெல் ரகங்கள் குறித்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாரம்பரியமிக்க நெல் ரகங்களின் விளைச்சலையும் சிவரஞ்சனியிடம் கேட்டறிந்தனர்.

    இதுகுறித்து நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ் கூறும்போது:-

    பாரம்பரியமிக்க நெல் பயிர் சாகுபடி குறித்து நேரடியாக ஆய்வு செய்தோம்.
     
    தமிழகத்தில் உள்ள 37 விதை பண்ணைகளுக்கு சிவரஞ்சனி சாகுபடி செய்த வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் விதைகளை வாங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து கொள்முதல் செய்ய உள்ளோம் என்றார்.
    Next Story
    ×