என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கீழ்வேளூர் அருகே சாட்டியகுடியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • லட்சுமி ஹோமம், ரக்சா பந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணா ஹுதி நடைபெ ற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சாட்டியகுடியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றது.

    அதனை த்தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்சா பந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணா ஹுதி நடைபெ ற்றது.

    தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து வலம்புரி விநாயகர் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நத்தபள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.
    • வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருச்சி புனித அன்னாள் சபை நிறுவனர் அன்னை அன்னம்மா நினைவாகவும், தலைமை அன்னையின் பொன்விழா நிறைவாகவும் கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது‌.

    கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் உள்ள கோஹஜ் மருத்துவமனையில் சபைத் தலைவர் ரெஜினாள் தொடங்கி வைத்தார்‌. வேளாங்கண்ணி சிறப்பு முதல் நிலை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், மருத்துவர் சங்கீதா, மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, ஒன்றிய துணை பெருந்தலைவர் சவுரிராஜ், காமேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 60 பயணாளிகள் பயனடைந்தனர்.

    • ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.

    வெற்றிபெற்று ஊர் திரும்பிய மாணவ-மாண விகளை ஆயக்காரன்புலம் 2 ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், ஆயக்காரன்புலம் நான்காம் சேத்திஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசிமற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெற்றோர்கள், கிராம மக்கள் சால்வை அணிவித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்து பாராட்டினர். 

    • முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெ க்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து சிறப்பு முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், விடுப்பட்டு போன முன்களப் பணியா ளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

    செப்டம்பர் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டு உள்ள அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்வாரும் பணிகள் ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் ஊரக வ ர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்வாரும் பணிகள் ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

    முன்னதாக இப்பணியினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் ஊரக வ ர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இந்நிலையில்ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி கேயன், ஒன்றிய பொறி யாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
    • 15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.

    15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி ஊர்வலம் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கியவீதிகள் வழியாக வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடை ந்தது.

    நாகை மறை மாவட்ட அதிபர் வின்சென்ட் தேவராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

    • நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்
    • 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். நாகூர் தர்காவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப்படித்தால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் முழு மனிதனாக மாற முடியும். மீண்டும் அவர் இதுபோலநபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம் என்று பாசத்தோடு கூறி கொள்கிறேன்.

    20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுனர்கள்குழு அமைத்து உரிய நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது வைக்கும் ஊழல் புகார்களை நிரூபித்தால் அதனை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி வழங்கப்பட்டது.
    • அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி பெட்டி நேற்று அவரது வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்ட ளையின் நிறுவனத் தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாநில நிர்வாகிகள் சாக்ரடீஸ், நாகூர் நகர ஒருங்கிணைப்பாளர் நாகைமணி கலந்து கொண்டனர்.

    மேலும் சிறப்பு விருந்தினராக ஓம்முருகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.

    • சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவடடம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் "ஒரே ஒரு பூமி "என்ற தலைப்பில் பிளாஸ்டிக் மாசுபாடு, காற்று மாசுபாடு அவற்றை தவிர்க்கும் முறைகள் பற்றி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    2021- 22 ஆம் கல்வியாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    பள்ளியின்தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

    தெற்குலேரி அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி ஆதினங்குடியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 20).

    இவர் மோட்டார் சைக்கிளில் ஆதினங்குடியில் இருந்து வவ்வாலடிக்கு புறப்பட்டார்.

    அப்போது தெற்குலேரி அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×