search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலம்ப பயிற்றுநர்களுக்கு அரசு வேலை - அமைச்சர் பேட்டி
    X

    சிலம்ப பயிற்றுநர்களுக்கு அரசு வேலை - அமைச்சர் பேட்டி

    • ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்
    • அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாகை அவுரி திடலில் கின்னஸ் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது விறுவிறுப்பான சினிமா பாடல்களுக்கு ஏற்ப உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் சிலம்பு சுற்றியது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் ெமய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சிலம்பம் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    விளையாட்டுத் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் சிலம்பம் பயிற்றுநர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் .சிலம்ப கலையை ஊக்குவிக்கும் 100 ஆசாங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×