search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motor theft"

    • சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக  சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.
    • போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் நலன் கருதி மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக  சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    மேலும் சுகாதார  வளாகத்தின் பின்புறம் போர்வெல் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி கருவேல மரங்கள் முள்புதர்கள் காடு போல மண்டி கிடக்கி றது.இதனால் சுகாதார வளாகத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்ம ந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மகளிர்மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்குட்டையை சுற்றியுள்ள செடி, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மீன்குட்டை ஓரம் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாரை உத்தண்டி வைத்துள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு சுரக்குடி மெயின் சாலையில், காரைக்கால் பொதுப்பணித்துறையில் எம்.டி.எஸ்.ஆக பணியாற்றி வருபவர் உத்தண்டி. இவர் மீன் குட்டை ஒன்றை பராமரித்து வருகிறார்.

    இந்த மீன்குட்டையை சுற்றியுள்ள செடி, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மீன்குட்டை ஓரம் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாரை உத்தண்டி வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு, வழக்கம்போல், மீன்குட்டையை நண்பர் மகாலிங்கம் என்பவருடன், உத்தண்டி பார்வையிட சென்றபோது, நீர் மோட்டாரை 4 பேர் திருடிசெல்வது தெரியவந்தது.

    தொடர்ந்து, நண்பர் உதவியுடன், நீர் மோட்டாரை திருடிசென்ற திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த மனோகர்(வயது35), ஜானகிராமன்(34), கருணாநிதி(34), ராஜேந்திரன்(37) ஆகிய 4 பேரில், மனோகர் மற்றும் ஜானகிராமனை, கையும் களவுமாக பிடித்து, நீர் மோட்டாரை பறிமுதல் செய்தார். மற்ற 2 பேர் தப்பியோடிவிட்டனர்.

    தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்த 2 பேரையும், உத்தண்டி திருநள்ளாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்து, தப்பியோடிய மற்ற 2 பேரையும் பிடித்து, 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 பேரை கைது செய்து, தலைமறைவான மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
    பெரம்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    பெரம்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து செம்பியம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் மலைவேல் மற்றும் போலீசார் பெரம்பூர் பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பெயர் பரத் (19), காமேஸ்வரன் (21) என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். விசாரணையில் அவர்கள் கொண்டு வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் படி மற்றொரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த மோட்டார்சைக்கிள்கள் பெரம்பூர் நியூ சின்னையா காலனியைச் சேர்ந்த மோகனசுந்தரம், வியாசர்பாடி ரேணுகா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரிடம் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அவற்றை எப்படி திருடினார்கள் என்பதையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான பரத் ஓட்டேரி சேமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர். மிண்ட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் கைதான காமேஸ்வரன் ஜமாலியா ஈ.எஸ்.ஐ. கார்டனைச் சேர்ந்தவர். 2 பேரும் கூட்டு சேர்ந்து மோட்டார்சைக்கிள்களை திருடி உள்ளனர்.

    வேறு இடங்களிலும் மோட்டார் சைக்கிள் திருடினார்களா? வேறு யாருடனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×