search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    பராமரிப்பு இன்றி காணப்படும் மகளிர் சுகாதார வளாக கட்டிடம்.

    மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக  சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.
    • போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் நலன் கருதி மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக சுகாதார வளாகம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    மேலும் சுகாதார வளாகத்தின் பின்புறம் போர்வெல் அமைக்க ப்பட்டுள்ளது.இந்த போர்வெலில் உள்ள மோட்டாரை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி செல்வதால் தண்ணீர் இல்லாமல் போய் விடு கிறது.

    மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி கருவேல மரங்கள் முள்புதர்கள் காடு போல மண்டி கிடக்கி றது.இதனால் சுகாதார வளாகத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்ம ந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மகளிர்மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×