search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் தகர கொட்டகையில் இயங்கும் வகுப்பறைகள்
    X

    அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தகர கொட்டகையில் இயங்கி வரும் வகுப்பறை.

    அரசு பள்ளியில் தகர கொட்டகையில் இயங்கும் வகுப்பறைகள்

    • இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1240 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள் தகர கொட்டகையில்செயல்படு கின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இங்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் தகரக் கொட்டகையில் இயங்கி வருவது பெற்றோர்களிடம் வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.

    இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1240 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டில் இப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவி மு.அபிநயா நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயிலும் வாய்ப்பை பெற்று மருத்துவம் பயின்று வருகிறார்.

    இப்படி பல சிறப்புகளை பெற்ற இந்த பள்ளியில் மாணவா்கள் பயில போதுமான கட்டிடவசதிகள் இல்லாததால் அவதிக்கு ள்ளா கின்றன றனர்.

    நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் 11 வகுப்புகள் தகரக் கொட்டகையில் நடைபெறு கின்றன. அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காததால் இந்த ஆண்டு மாணவர்கள் சோ்க்கையை மேற்கொள்ள ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    இப்பள்ளியில் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக சமூக ஆர்வலர் சுல்தானூல் ஆரிபின் வழங்கிய நன்கொடை ரூ.15 லட்சம் உள்பட ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. மொத்தம் உள்ள 15 வகுப்பறைகளும் அதிநவீன இணைய சேவை வசதி மற்றும் தொடு திரையுடன் கூடிய டிஜிட்டல் வகுப்பறையாக உள்ளன.

    இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக 11 வகுப்பறைகள்தகர கொட்டகையில்செயல்படு கின்றன. இதற்கான செலவினங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தானூல் ஆரிபின் ஈடு செய்து வருகிறார்.

    கூடுதலாக 28 வகுப்புகளு க்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து 3 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.இப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும் ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை. விளையாட்டு அரங்கம், கழிப்பறை வசதியும் குறைவானஅளவில் உள்ளன.

    கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இப்பள்ளியையும் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை உடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது இப்பகுதி பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×