என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் பாலாலயத்தில் சூரியனார்கோயில் ஆதீனம் பங்கேற்றார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழைமை வாய்ந்த 
    ஸ்ரீசோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 
    கடந்த 2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது புணர்நிர்மானம் செய்து, கும்பாபிஷேகம் செய்வதற்கான 
    பாலாலய பணிகள் தொடங்கியது.

    இதற்காக யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பாலஸ்தாபனம், விநாயகர் வழிபாடு, பிரவேசபலி, வாஸ்துசாந்தி மற்றும் சிறப்பு யாகங்கள் செய்து, 
    கடம் புறப்பாடு நடைபெற்றது. 

    கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கொண்டு, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், பைரவர், மஹாலெட்சுமி, தெட்சிணாமூர்த்தி 
    உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் பூமி பூஜை சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக 
    பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. 

    சந்திரசேகர சிவாச்சாரியார் சர்வசாதகம் செய்து வைத்தார்.

    இதில், திருப்பணிச் செம்மல் சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்மலாதேவி, பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலத்தில் கிராம நாட்டாண்மை பிரச்சினையால் தம்பியை அண்ணன் குத்திக் கொன்றார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பாலையூர் 
    அருகே உள்ள சிவனாரகரம் கிராமம் மேலத்தெருவைச் 
    சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). விவசாயியான இவர் 
    ஒரு வருடத்துக்கும் மேலாக அப்பகுதியில் நாட்டாண்மையாக இருந்து வருகிறார். 

    இவருக்கும், அதே கிராமம் நடுத்தெருவில் வசிக்கும் 
    இவரது அண்ணன் பாண்டியன் (55) என்பவருக்கும் 
    ஒரு வருடத்திற்கு மேலாகியும் நாட்டாண்மையை மாற்றாதது 
    தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில் 
    வடக்குமலையான் கோவில் கட்டுவது தொடர்பாகவும் 
    பிரச்சினை இருந்து வந்தது. அந்த இடம் பாண்டியனின் 
    புழக்கத்தில் இருந்ததால் அங்கு கோவில் கட்டுவதற்கு 
    பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    சம்பவத்தன்று இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 
    இதில் பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் (26) ஆகியோர் செந்தில்குமாரை கத்தியால் குத்தினர். 

    இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த 
    பாலையூர் போலீசார், பாண்டியன் மற்றும் 
    சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
    மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    மயிலாடுதுறை:-

    மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழர் தேசிய முன்னணி சார்பில் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். 

    மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் முன்னிலை வகித்தார். 

    சமீபத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 940 தபால் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த 40 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கொடுத்து, 900 வேலைவாய்ப்பை வடமாநிலத்தவர்களுக்கு கொடுத்த பணி நியமன ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும். 

    தமிழ்நாட்டில உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    இதில் தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட பொருளாளர் சுகுமார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலுகுணவேந்தன், ஓய்வு பெற்ற தாசில்தார் ராமகிருஷ்ணன், நிர்வாகி ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவி கிடைக்காததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் அறிவித்துள்ளார். அவருடைய கணவர் கட்சி பொறுப்பை உதறினார்.
    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவி கிடைக்காததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தி.மு.க. பெண் கவுன்சிலர் அறிவித்துள்ளார். அவருடைய கணவர் கட்சி பொறுப்பை உதறி உள்ளார். 

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரஸ்வதி. இவர், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். இவருடைய கணவர் வெற்றிவேல் தி.மு.க. பேரூர் செயலாளராக இருந்தார். 

    இந்த நிலையில் சரஸ்வதி நேற்று பேரூராட்சி கவுன்சிலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.

    இது குறித்து சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:- 

    பேரூராட்சி தேர்தல் அறிவித்த உடன் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு தன்னை தேர்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். 

    அதே போல் அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைத்தேன். ஆனால் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

    அதனால் வருத்தம் அடைந்த நான் தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அன்று மதியம் எனது கணவரை அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எம்.எல்.ஏவை வீட்டில் சென்று சந்தியுங்கள். 

    உங்களுக்கு துணைத்தலைவர் பதவி கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி நானும் எனது கணவரும் எம்.எல்.ஏ. வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தோம். 

    நாங்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டதாக எம்.எல்.ஏ. கூறினார். இதனால் அதிருப்தி அடைந்தோம். உறுப்பினராக இருந்து மட்டும் செயல்பட முடியாது என்ற நிலையில் பேரூராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

    இதேபோல் அவருடைய கணவர் வெற்றிவேல் தான் வகித்து வந்த தி.மு.க. பேரூராட்சி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

    நான் 10 ஆண்டு காலமாக தரங்கம்பாடி பேரூர் தி.மு.க. செயலாளராக இருந்து வந்தேன். எனது குடும்பம் பாரம்பரிய தி.மு.க. குடும்பமாகும். எனது தந்தை தலைவர் கருணாநிதியை சைக்கிளில் அழைத்துச்சென்று கூட்டம் நடத்தியவர். பேரூராட்சி தலைவர் பொறுப்பை எனது மனைவிக்கு கேட்டேன். அவருக்கு வழங்கப்படவில்லை. 

    2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை எனது மனைவி பேரூராட்சி தலைவராக இருந்தபோது எந்த குற்றச்சாட்டிற்கும் ஆளாகவில்லை. பொறையாறு புதிய பஸ் நிலையம் கொண்டுவரவும், பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டு வரவும் பாடுபட்டார். இவருக்கு தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ வழங்க மறுத்து விட்டனர். இனியும் கட்சி செயலாளராக இருந்து கட்சி பணி ஆற்ற முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே எனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். 

    தொடர்ந்து தி.மு.க. உறுப்பினராக இருந்து பணியாற்றுவேன். 

    இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.
    ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் வீடுவீடாக டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம், அம்பேத்கர் தெரு, ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலால் அறிகுறி தென்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து அப்பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் வீடுகளில் சுற்றி பழைய பொருட்கள் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுற்றி கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர் சிவப்பிரகாசம் ஊராட்சி செயலர் சோழராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கொண்ட குழுவினர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு புகை இயந்திரம் மூலம் கொசு மருந்து அடித்தனர்.இதனால் அப்பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பதற்கு முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    சீர்காழியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
    சீர்காழி:

    பொதுமக்கள் காலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வலியுறுத்தியும், சைக்கிள் ஓட்டுதல் அவசியம் குறித்தும் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். 

    சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், அமுதாராணி, நாகரத்தினம், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ், காயத்ரி மற்றும் 80 -க்கும் மேற்பட்ட போலீசார், பெஸ்ட் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று சீர்காழி சட்டநாதபுரம், தென்பாதி, புதிய, பழைய பஸ் நிலையம், மணிகூண்டு, கொள்ளிடமுக்கூட்டு, புறவழிச்சாலை வழியாக சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    வைத்தீஸ்வரன்கோவிலில் வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பாக விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாட்கள் வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சி முகாம் தொடங்கியது.

    விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதை தடுக்கவும், மதிப்புக்கூட்டு பொருளாக உற்பத்தி செய்து நிலையான லாபம் பெறும் நோக்கிலும் இப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் முகாமை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தொடக்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குனர், வேளாண் வணிகம் சங்கரநாராயணன் இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கவுரை ஆற்றினார்.

    மாவட்ட வளர்ச்சி மேலாளர் நபார்டு, முன்னோடி வங்கி மேலாளர், வேளாண்மை துணை இயக்குநர், வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஆலோச னைகளை வழங்கினர். முகாமில் இயற்கை சாகுபடி காய்கறிகள், பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. 

    மேலும் கருவாடு தயாரிப்பு, மீன் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு, பனை ஓலை பொருட்கள் மற்றும் சணல் பை தயாரிப்பு உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேளாண் துறை, வேளாண் வணிகத்துறை, கால்நடை துறை, மீன்வளத்துறை மற்றும் இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தி கோவிலில் நடந்த கோபாலகிருஷ்ண பாரதி இசை விழா முடிவடைந்தது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் வள்ளலார் கோயில் எனப்படும் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் நடைபெற்றுவந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34&வது ஆண்டு இசை விழா நிறைவடைந்தது.

    மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் பிறந்தவரான கோபாலகிருஷ்ண பாரதி சிவனை மட்டுமே பாடியவர். பன்மொழிப் புலவர்களுடன் தொடர்புகொண்டு, அந்தந்த மொழி இசையையும் கற்ற இவர், மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை சந்திக்க திருவையாறு சென்ற இடத்தில் ‘சபாபதிக்கு வேறு தெய்வம்“ என்ற பாடலை இயற்றியுள்ளார். இவர் 1896&ம் ஆண்டு தமது 86&வது வயதில் சிவராத்திரியன்று சிவபதம் எய்தினார்.

    இவரது நினைவைப் போற்றும் வகையில் மயிலாடுதுறையில் கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் இசை விழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல கர்நாடக இசை பாடகி சவுமியாவின் இசை ஆராதனை நடைபெற்றது. இதில், ‘சபாபதிக்கு வேறு தெய்வம்“ எனத் தொடங்கும் கீர்த்தனை உள்ளிட்ட கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய பல்வேறு பாடல்களை மனமுருக பாடினார்.

    மேலும், திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன், பாண்டமங்கலம் பி.ஜி.யுவராஜ் குழுவினரின் நாதஸ்வரம், ரித்விக் ராஜாவின் இன்னிசை பாடல் நிகழ்ச்சி ஆகியனவும் நடைபெற்றது. இதில், ஏராளமான இசை ரசிகர்கள் கலந்துகொண்டு இன்னிசையை கேட்டு ரசித்தனர்.
    சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் 5 அடி உயர பனி லிங்கத்துக்கு வழிபாடு நடைபெற்றது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு அருகில் அறுபத்து மூவர் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி பா.ஜ.க. சார்பில் 5 அடி உயரத்தில் பனிலிங்கம் நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 

    பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன், சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட அக்கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். 

    நிகழ்ச்சியில், பனிலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

    இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, பனிலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
    செம்பனார்கோவில் ஒன்றியத்தில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை என ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவுசெய்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    பூம்புகார் தொகுதி, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் நந்தினி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    பிச்சமுத்து வரவேற்றார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:-மோகன்தாஸ்:- கிடாரங்கொண்டான் ஊராட்சியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    சாந்தி முருகவேல்:- ஆக்கூர் முக்கூட்டு, பஞ்சதட்டை, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆக்கூர் மஞ்சளாறு பகுதியில் ஈமகிரியை மண்டபம் மற்றும் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தெற்கு தெரு ஆற்றங்கரை பகுதியில் இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும்.

    முத்துலட்சுமி:- பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையான ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஆறுபாதியில் ரேஷன் கடை கட்டிடத்தையும் சீரமைக்க வேண்டும்.

    சக்கரபாணி:- கருவாழக்கரை, ஆலவேலி, சேமங்கலம் ஆகிய பகுதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும். கருவாழக்கரை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இ&சேவை மையத்தை திறக்க வேண்டும்.

    கிருஷ்ணன்:- வல்லம்- மகாராஜபுரம் இடையே உள்ள கப்பி சாலை சேதமடைந்து உள்ளது. அரையும் குறையுமாக அமைக்கபட்ட சாலை கப்பிகள் பெயர்ந்து கிடைக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமபடுகின்றனர். உடனே சீரமத்து தார்சாலையாக அமைத்துதரவேண்டும். பரசலூரில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. அன்றாடம் கூலிவேலை செய்பவர்கள் அவர்களுக்கு கொடுத்த நிதி போதுமானதாக இல்லை.

    ஏழைகளுக்கு மட்டும் எம்.எல்.ஏ.மற்றும் சேர்மன் தங்களது சொந்த செலவில் கூடுதல் நிதி உதவி வழங்கி வீடுகட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.

    எம்.எல்.ஏ. நிவேதா முருகன், உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று பேசும்போது, ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் பாதாளசாக்கடை கழிவுநீர் கலப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். நிதி பற்றாக்குறையால் பரசலூரில் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசின் வீடு கட்டும் பணிக்கு நிதி உதவிகள் அளித்து சரி செய்யப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா, ஒன்றிய பொறியானர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    சீர்காழி தென்பாதி அங்காளம்மன் கோவிலில் மயான சூரை நிகழ்ச்சி நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே ராஜராஜேஸ்வரி எனும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. 

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூரை நிகழ்ச்சிவெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

     அதன்படி இந்தாண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான சூரை நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால்குடங்கள், பறவைக் காவடி, அலகு காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதேபோல் சிறுதேரோட்டம் நடந்தது. 

    பின்னர் இரவு பேச்சி அம்மன் ரூபத்தில் அங்காளம்மன் எழுந்தருளி ஆட்டத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மயான 
    சூறை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை அருகே இளம்பெண் இறந்த வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே கடந்த 25ம் தேதி அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் காயத்துடன் இறந்து கிடந்தார்.

    மயிலாடுதுறை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்&இன்ஸ் பெக்டர் இளையராஜா உள்ளிட்ட 7 பேர், அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. அடையாளம் தெரியாத இளம்பெண் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய நிலையில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்ததில் நீடூர் பி.எம் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜன் மகன் ஐயப்பன் (27) என்பவரை கைது செய்தனர்.

    விசாரணையில் இறந்த இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. 
    மனைவி இறந்த நிலையில் குழந்தையுடன் வசிக்கும் ஐயப்பன், சிறுமியுடன் பழகி வந்துள்ளார். மகனை விடுதியில் சேர்த்து விட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஐயப்பனை வற்புறுத்தி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து சிறுமி மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததும் தெரிய வந்தது.

    3 நாட்களில் குற்ற வாளியை பிடித்த தனிப்படை போலீசாரை அலுவல கத்திற்கு வரவழைத்து பாராட்டிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    ×