என் மலர்
உள்ளூர் செய்திகள்

சைக்கிள் பேரணி.
சைக்கிள் ஓட்டுவதை வலியுறுத்தி போலீசார் பேரணி
சீர்காழியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
சீர்காழி:
பொதுமக்கள் காலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வலியுறுத்தியும், சைக்கிள் ஓட்டுதல் அவசியம் குறித்தும் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், அமுதாராணி, நாகரத்தினம், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ், காயத்ரி மற்றும் 80 -க்கும் மேற்பட்ட போலீசார், பெஸ்ட் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று சீர்காழி சட்டநாதபுரம், தென்பாதி, புதிய, பழைய பஸ் நிலையம், மணிகூண்டு, கொள்ளிடமுக்கூட்டு, புறவழிச்சாலை வழியாக சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story






