என் மலர்
உள்ளூர் செய்திகள்

செம்பனார்கோயில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை என ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவுசெய்துள்ளனர்.
தரங்கம்பாடி:
பூம்புகார் தொகுதி, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் நந்தினி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பிச்சமுத்து வரவேற்றார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு:-மோகன்தாஸ்:- கிடாரங்கொண்டான் ஊராட்சியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
சாந்தி முருகவேல்:- ஆக்கூர் முக்கூட்டு, பஞ்சதட்டை, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆக்கூர் மஞ்சளாறு பகுதியில் ஈமகிரியை மண்டபம் மற்றும் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தெற்கு தெரு ஆற்றங்கரை பகுதியில் இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும்.
முத்துலட்சுமி:- பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையான ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஆறுபாதியில் ரேஷன் கடை கட்டிடத்தையும் சீரமைக்க வேண்டும்.
சக்கரபாணி:- கருவாழக்கரை, ஆலவேலி, சேமங்கலம் ஆகிய பகுதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும். கருவாழக்கரை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இ&சேவை மையத்தை திறக்க வேண்டும்.
கிருஷ்ணன்:- வல்லம்- மகாராஜபுரம் இடையே உள்ள கப்பி சாலை சேதமடைந்து உள்ளது. அரையும் குறையுமாக அமைக்கபட்ட சாலை கப்பிகள் பெயர்ந்து கிடைக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமபடுகின்றனர். உடனே சீரமத்து தார்சாலையாக அமைத்துதரவேண்டும். பரசலூரில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. அன்றாடம் கூலிவேலை செய்பவர்கள் அவர்களுக்கு கொடுத்த நிதி போதுமானதாக இல்லை.
ஏழைகளுக்கு மட்டும் எம்.எல்.ஏ.மற்றும் சேர்மன் தங்களது சொந்த செலவில் கூடுதல் நிதி உதவி வழங்கி வீடுகட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.
எம்.எல்.ஏ. நிவேதா முருகன், உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று பேசும்போது, ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் பாதாளசாக்கடை கழிவுநீர் கலப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். நிதி பற்றாக்குறையால் பரசலூரில் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசின் வீடு கட்டும் பணிக்கு நிதி உதவிகள் அளித்து சரி செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா, ஒன்றிய பொறியானர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






