என் மலர்
மதுரை
- திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் நகை பறிப்பு- வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- பால்சுணை கண்ட சிவன் கோவில், அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது.
மதுரை
மதுரையில் உள்ள முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பால்சுணை கண்ட சிவன் கோவில் மற்றும் அரசு சுற்றுச்சூழல் பூங்கா, மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழி உள்ளது. இங்கு தினமும் திரளானோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.
விசேஷ நாட்கள் தவிர மற்ற நேரங்களில் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் ஆட்கள் நடமாட்டம் மிக மிக குறைவாக இருக்கும். போலீசாரும் கண்டு கொள்ளாததால் அந்தப்பகுதி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
மது, கஞ்சா அடித்து சுற்றித்திரியும் இவர்கள் அந்த வழியாக செல்லும் நபர்களை குறிவைத்து பணம், நகை, செல்போன் பறிப்பு போன்ற செயல்களில் துணிகரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்துள்ளனர். போலீசார் தீவிர ரோந்து சென்று சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமங்கலத்தில் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
- ரேசனில் தரம் குறைந்த அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதிப்பனூர் கிராமத்தில் சில மாதங்களாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், குப்பைகள் கலந்து வழங்குவதால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை வட்ட வழங்கல் அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை கண்டித்து திருமங்கலம் ஊராட்சி யூனியன் அலுவ லகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தரமான அரிசி வழங்கியதாகவும், தற்போது மட்டமான அரிசி வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
- மதுரையில் அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
- தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.
மதுரை
தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று பேரணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் பேரணிக்கு அனுமதி இல்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், ஆசிரியர் சரவணன், டான்சாக் மனோகரன், மாரியப்பன், முருகன், ஆறுமுகம், மாரி, முனியசாமி உள்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
- மதுரை அருகே விவசாயி வீட்டில் 45 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மதுரை
மதுரை பெருங்குடி அருகே வலையப்பட்டியை அடுத்துள்ள ஓ.ஆலங்கு ளத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 45 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பாண்டி கதவு உடை க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பெருங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்க ப்பட்டன. இந்த துணிகர கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- வாடிப்பட்டியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
மதுரை
வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (17-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு. விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு. தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர். பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை புதூர் துணைமின் நிலையத்தின் அகில இந்திய வானொலி நிலைய பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பாரதிஉலா ரோடு, பொதுப்பணித்துறை குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனி, பாஸ்போர்ட் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, தாமரைத்தொட்டி முதல் அன்பகம் வரை, யூனியன் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (17-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது.
- சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மாவட்ட கனிமவளத்துறை நிதி ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிட பணிக்கான பூமி பூஜையும், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது. சோழவந்தான் சட்டம ன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி பொறியாளர் பூப்பாண்டி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், ஊராட்சி தலைவர் பவுன்முருகன், துணைதலைவர் பாக்கியம்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, சுப்பிரமணி, ஊராட்சி துணைதலைவர் கேபிள்ராஜா, ரிசபம் ஊராட்சிதலைவர் சிறுமணி, திருவேடகம் ராஜா, பேட்டை பெரியசாமி, மாணவரணி தவமணி, ஊராட்சி செயலர் திருசெந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
- இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அருகே சமயநல்லூர்-சோழ வந்தான் இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. வெள்ளை கலர் சேலை, ஆரஞ்சு கலர் பாவாடை, சந்தன கலர் ஜாக்கெட் அணிந்திருந்த அந்த மூதாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இது தொடர்பாக தேனூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்தப்பெண் நேற்று காலை சமயநல்லூர்-சோழவந்தான் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கலாம். அப்போது அந்த வழியாக சென்ற ெரயிலில் அடிபட்டு, அல்லது மதுரை- திண்டுக்கல் ெரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தோ இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி பற்றிய அடையாளம் தெரிந்தால் 0452- 2343851, 94981 01988 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மதுரை ெரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழகம் உடனான பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது.
அப்போது இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தகம் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கருத்தரங்கு, விவாதம் போன்றவை நடக்க உள்ளது. அடுத்தபடியாக தமிழகத்தின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி- கைவினை பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடக்கிறது.
இது தவிர பரதநாட்டியம், கர்நாடக இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்கும். இதனைத் தொடர்ந்து தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, வில்லுப்பாட்டு, பொம்ம லாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், கரகம், பட்டிமன்றம், நாட்டுப்புற தமிழ் நடனங்கள், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவை அரங்கேற உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து மாண வர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் செல்ல உள்ளனர். அவர்களின் வசதிக்காக இன்று (16-ந்தேதி), 23, 30 டிசம்பர் 7, 14 ஆகிய நாட்களில் ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ெரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படட உள்ளது.அதேபோல நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18 ஆகிய நாட்களில் பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ெரயிலில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கணவர் இறந்த 4 நாட்களில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 11-ந் தேதி வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவரின் இந்த முடிவால் செல்வி மிகவும் வேதனையடைந்ததாக தெரிகிறது. சோகத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாரத்தில் கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு தற்கொலை
டி.கல்லுப்பட்டி ராம்முன்னி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). மதுப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேரையூர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த தங்கராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரது மகன் மாசாணம், தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை. உடனே வீட்டுக்கு சென்று பார்த்த போது தங்கராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும்பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்து 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருைத கீழ்காணும் தகுதிகள் உள்ள பெண் குழந்தைகளிடம் இருந்து கருத்துருக்களை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண்,குழந்தை (31 டிசம்பர்-ன்படி), கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல்.
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய பெண் குழந்தைகள் விண்ணப்பத்தை, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 3-வது தளம், மதுரை-625 020 என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை மதுரை மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி.எண் 0452-2580259-க்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளம்பெண்கள் உள்பட 3 பேரும் திடீரென ஹேமலதாவை சரமாரியாக தாக்கி கயிற்றால் கட்டிப்போட்டனர்.
- டியூசன் எடுக்க சென்ற ஹேமலதாவின் மகள், வீட்டுக்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் தாயார் திறக்கவில்லை.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் கத்தார் நாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா(வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மதுரையில் உள்ள விடுதியில் தங்கி மகன் படித்து வருகிறார். ஹேமலதா அவரது மகளுடன் கீழவளவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஹேமலதாவின் மகள் அருகில் உள்ள வீட்டுக்கு டியூசன் எடுக்க சென்றிருந்தார். ஹேமலதா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு அறிந்து, 40 வயது ஆண் மற்றும் 20 வயதுடைய 2 இளம்பெண்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.
ஹேமலதாவிடம், கத்தார் நாட்டில் உங்கள் கணவர் பணிபுரியும் நிறுவனத்தில் நான் வேலை பார்க்கிறேன் என்று அந்த ஆண் கூறியதுடன், தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன் என தெரிவித்துள்ளார்.
அதனை நம்பி ஹேமலதா, 3 பேரையும் வீட்டுக்குள் அழைத்து உபசரித்தார். அப்போது அந்த இளம்பெண்கள் உள்பட 3 பேரும் திடீரென ஹேமலதாவை சரமாரியாக தாக்கி கயிற்றால் கட்டிப்போட்டனர்.
பின்பு அவரது வாயில் பிளாஸ்திரியை ஒட்டி கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை பறித்தனர். பீரோவை திறந்து அதில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம், ஹேமலதாவின் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
டியூசன் எடுக்க சென்ற ஹேமலதாவின் மகள், வீட்டுக்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் தாயார் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். ஜன்னல் வழியாக பார்த்த போது, ஹேமலதாவை கட்டி போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரொபோனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஹேமலதாவை மீட்டு விசாரணை நடத்தினர். திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து பெண்ணை கட்டிப்போட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிச்சென்ற இளம்பெண்கள் உள்பட 3 பேரை தேடிவருகின்றனர்.
- ரூ.2 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட பஸ் கண்டக்டர், மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 35). இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பைக்காரா, முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் இளங்கோவன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் பொன்மேனி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரும், மனைவி கவிதாவும் மாத சீட்டு வசூலித்து வந்தனர். நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் சீட்டு போட்டிருந்தேன். மாத சீட்டு முதிர்வடைந்தது. இளங்கோவன் தரப்பினர் எனக்கு ரூ.1.44 லட்சம் மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை கேட்டேன். அவர்கள் தர மறுத்து விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






