ெரயில் தண்டவாளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்

ரயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ெரயில் தண்டவாளத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்
Published on

மதுரை

மதுரை அருகே சமயநல்லூர்-சோழ வந்தான் இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. வெள்ளை கலர் சேலை, ஆரஞ்சு கலர் பாவாடை, சந்தன கலர் ஜாக்கெட் அணிந்திருந்த அந்த மூதாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இது தொடர்பாக தேனூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்தப்பெண் நேற்று காலை சமயநல்லூர்-சோழவந்தான் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கலாம். அப்போது அந்த வழியாக சென்ற ெரயிலில் அடிபட்டு, அல்லது மதுரை- திண்டுக்கல் ெரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தோ இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி பற்றிய அடையாளம் தெரிந்தால் 0452- 2343851, 94981 01988 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மதுரை ெரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com